
ஐஸ்கிரீம்கள் பிறந்தது எங்கே?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஓர் உணவுப்பொருள் ஐஸ்கிரீம். உலகில் ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தியதிலிருந்து அதன் வளர்ச்சி வரை சீனா, கிரேக்கம், இத்தாலி, பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ரஷ்யா வரை பல்வேறு நாடுகள் சொந்தம் கொண்டாடினாலும், ஐஸ்கிரீம்க்கு அந்த பெயரை சூட்டியது பிரான்ஸ் நாடுதான். ஐஸ்கிரீம் அதிகம் பயன்படுத்தும் நாடுகள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நார்வே.
ஐஸ்கிரீம் விற்பனையில் முன்னணி நாடுகள் எவை?
இந்தியாவில் ஐஸ்கிரீமின் ஆண்டு வர்த்தகம் 165 பில்லியன். இந்தியாவில் ஐஸ்கிரீம்யை வர்த்தக ரீதியாக அறிமுகம் செய்தது. வாடிலால் ஐஸ்கிரீம்தான். 1907ம் ஆண்டு குஜராத்தில் வாடிலால் காந்தி என்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது ஐந்தாம் தலைமுறை இந்நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் 45 நாடுகளில் விற்பனையாகிறது. இந்திய அளவில் விற்பனையில் மூன்றாம் இடத்தில் உள்ளது வாடிலால் ஐஸ்கிரீம்.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஐஸ்கிரீம் குஜராத்தில் உள்ள அமுல் நிறுவன ஐஸ்கிரீம்தான். 1996ல் விற்பனையை துவக்கிய இந்நிறுவனத்தின். ஆண்டு விற்பனை 39,000 கோடிகள். முழுக்க முழுக்க 100 சதவீதம் ஒட்டகப் பாலில் ஐஸ்கிரீம் செய்து அறிமுகப்படுத்தி சாதனை படைத்த நிறுவனம்.
குவாலிட்டி வால்ஸ் ஐஸ்கிரீம் இந்தியாவில் விற்பனையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஐஸ்கிரீம். இது ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனியின் தயாரிப்பு. பல்வேறு வகையான ஐஸ்கிரீம்களை வழங்கும் இந்த நிறுவன ஐஸ்கிரீம்கள் முழுக்க முழுக்க பசுவின் பாலைக்கொண்டு தயாராகும் சைவ ஐஸ் கிரீம்கள்.
இந்திய அளவில் தற்போது ஐஸ்கிரீம் விற்பனையில் சக்கைப்போடு போடும் அருண் ஐஸ்கிரீம் 1970ம் ஆண்டு வட சென்னையில் உள்ள ராயபுரத்தில் 250 சதுர அடி இடத்தில் 3 தொழிலாளர்களுடன் 25,000 ரூபாய் மூலதனத்தில் தொடங்கப்பட்டது இந்நிறுவனத்தின் முதல் ஆண்டு வருமானம் 1,25,000. தற்போது அதன் சந்தை மதிப்பு ரூபாய் 7200 கோடிகள்.
உலகிலேயே மிக உயர்ந்த விலை ஐஸ்கிரீம் எது?
உலகளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகள் இருந்தாலும் அதிக மக்கள் விரும்பி சாப்பிடுவது வென்னிலா, சாக்லேட் மற்றும் ஸ்ட்ராபெர்ரி வகை ஐஸ்கிரீம்களைதான். தற்போது உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்படும் ஐஸ்கிரீம் ஜப்பானில் பிரபலமாக இருக்கும் ‘செல்லாட்டோ’ பிராண்ட் தயாரிக்கும் ‘பையகுயா’ எனும் ஐஸ்கிரீம்தான். இத்தாலி ஆல்பாவில் வளர்க்கப்படும் ஒரு வகை அரிய வெள்ளை நிற கடல்பாசியைக்கொண்டு தயாராகி, சீஸ், ஸேக் லீஸ் மற்றும் தங்கத்துகள்கள் கலந்து விற்கப்படுகிறது.
இந்த ஐஸ்கிரீம் ஒரு கிலோ 2 மில்லியன் ஜப்பானிய யென் விலையில் விற்கப்படுகிறது. இந்திய ரூபாயில் 5.2 லட்சம். உலகின் விலை உயர்ந்த ஐஸ் கிரீம் என கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
ஐஸ்கிரீம்களை எப்போது, எப்படி சாப்பிட வேண்டும்?
நிபுணர்கள் கூற்றுப்படி ஐஸ்கிரீம்களை காலை வேளையில் சாப்பிடுவது நல்லது. காலையில் உணவுக்கு பின் ஐஸ்கிரீம்ளை சாப்பிட புத்துணர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என்கிறார்கள். வெறும் வயிற்றில் ஐஸ்கிரீம்களை சாப்பிட கூடாது. காலை உணவில் ஐஸ்கிரீம்களை சாப்பிட்டால் அது உங்களை புத்திசாலியாக மாற்றி அன்றைய நாளில் நீங்கள் பார்க்கும் வேலைகளில் உங்கள் திறமையை மேலும் அதிகரிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதை ஆய்வு மூலம் நிரூபித்துள்ளனர்.
ஐஸ்கிரீம் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்க காரணம். அதனை சாப்பிடும்போது ‘செரட்டோனின்' எனும் மகிழ்ச்சி ஹார்மோன் சுரப்பதுதான். ஐஸ்கிரீம் மன அழுத்தத்தை உருவாக்கும் ‘கார்டிசோல்’ என்ற ஹார்மோன் சுரப்பையும் கட்டுப்படுத்தும். ஐஸ்கிரீம் தயாரிப்பில் சேரும் கலவைகளால் அதை சாப்பிட்டவுடன் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. அதோடு உடல் வலிமை மற்றும் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகரிக்கிறது என்கிறார்கள்.
ஐஸ்கிரீமில் வைட்டமின் பி12, வைட்டமின் கே உள்ளது. பாலில் உள்ள கொழுப்பு சத்து ஐஸ்கிரீமில் இருப்பதில்லை, பாலை விட கால்சியம் சத்து ஐஸ்கிரீமில் அதிகம் கிடைக்கிறது. தரமான ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தொண்டை வலி, சளி பிடித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. உடல் நிலையை சீராக வைத்திருக்க விண்வெளி வீரர்களுக்கு ஐஸ்கிரீம் பரிந்துரை செய்யப்படுகிறது
ஐஸ்கிரீமை சாப்பிடும் முறையில் சாப்பிட்டால் அது நமக்கு கெடுதல் செய்யாது. எப்போதும் ஐஸ்கிரீம்களை சாப்பிட சிறிய கரண்டியை பயன்படுத்த வேண்டும். ஐஸ்கிரீமை சிறிதளவு எடுத்து நாக்கின் மீது வைத்து அது உருகிய பின்னர் சாப்பிட வேண்டும். வெயிலில் அலைந்ததற்கு பிறகு உடனே ஐஸ்கிரீம்களை சாப்பிட கூடாது. குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் கழித்தே சாப்பிட வேண்டும். ஐஸ்கிரீம்களை சாப்பிட்ட பிறகு வாய்கொப்பளித்து விட்டு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை அருந்துவது நல்லது.