
வானில் நிகழ்வு
உயரே பறந்த உயிா்கள்
சிறகொடிந்த பறவைகள்போல்
சிதறிய கொடுமை
சொல்லிலடங்காது துயரம் தாளாது
எமனுக்கென்ன அகோரப்பசி?
எத்தனை எத்தனை ஜீவன்கள்
பலவகை கனவுகளோடு
யுத்த களம் போல மாண்டு கிடந்தனவே
எத்தனை கடமைகள், எத்தனை வேலைகள்,
அத்தனையும் ஒரு நொடியில் நொறுங்கியது கண்டு
மனதும் இதயமும் பதைபதைக்கிறதே !!
பயணித்த அத்தனை குடும்பமும் சொந்தங்களை இழந்து
தவிக்கும் வலியை உணர முடிகிறது!
வேதனைக்கொடி மனமெங்கும் நீக்கமற படர்கிறதே!
என்ன பாவங்கள் செய்தன அந்த ஜீவன்கள்!
துயரம் விடுபட வெகுநாளாகுமே!
கோடியாய் கொடுத்தாலும் இழப்புக்கு ஈடுதான் உண்டா ?
செய்தியை அறிந்து நாடே பதறுகிறது
நாலாபுறமும் ஈரல்குலைகள் நடுங்குகின்றன !
ஈவு இறக்கம் காட்ட இறைவனுக்கு ஏன் மனமில்லை?
கனத்த இதயம் கரையாது!
மனதின் துயரம் மீளாது !
வானின் பயணம் பயம் நீங்காது !
இனி ஒரு துயரம் இதுபோல் வேண்டாம்,
வேண்டவே வேண்டாம் என வேண்டுவோம்
இதில் அரசியலும் வேண்டாம்
அத்துனை ஆன்மாக்களும் சாந்தி அடையட்டும் இறைவன் காலடியில்!
இறைவா இனி ஒரு கொடுமை வேண்டாம்!
இதயம் வலிக்கிறது
துடிப்பில் துயரத்தின் தாக்கம் தொிகிறது,
"ஓம் ஷாந்தி ,"ஓம் சாந்தி"