அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் ஏப்ரல் 14!

அண்ணல் அம்பேத்கர் 133 வது பிறந்தநாள் ஏப்ரல் 14!
Published on

ந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டை மேதை டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

சமூகச் சீர்திருத்தத்திற்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் டாக்டர் அம்பேத்கர். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகும் செயல்பட்டவர்.

பாபாசாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் அவர்கள் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் நாள் இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள (இப்போது மத்திய பிரதேசத்தில் உள்ளது) அம்பாவாதே கிராமத்தில் ராம்ஜி பாலாஜி சக்பாலுக்கும், பீமா பாய்க்கும் பதினான்காவது குழந்தையாக ஒரு மராத்திய குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ராணுவ பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

1904 ஆம் ஆண்டு   இவருடைய குடும்பம் மும்பைக்கு குடி பெயர்ந்தது. அங்கு எல் பி இன்ஸ்டன்ட் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து கல்வியை தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு தனது பள்ளி படிப்பை முடித்தார். பிறகு தனது படிப்பை பரோடா மன்னரின் உதவியுடன் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பை  தொடர்ந்தார். 1912இல் அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இடங்களை பட்டம் பெற்றார்.

 சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைத்தலைவராகவும் பணியாற்றினார். பரோடா மன்னர் சாயாஜி ராவ் உதவியுடன் உயர்கல்விக்காக அமெரிக்கா பயணமானார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற அம்பேத்கர்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பொருளாதார அரசியல் தத்துவம் மற்றும் சமூகவியல் ஆகிய பாடங்களை கற்றார். 1915இல் பண்டைய இந்தியாவின் வர்த்தகம் என்ற ஆய்விற்கு முதுகலை பட்டம் பெற்றார். பின்னர்  இந்திய லாப பங்கு ஒரு வரலாற்று பகுப்பாய்வு என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. மேலும் 1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியை பரவலாக்குதல் என்ற ஆய்வுக்கு முழு அறிவியல்  பட்டமும் 1923 ஆம் ஆண்டு ரூபாயின் பிரச்சனை என்ற ஆய்வுக்கு டிஎஸ்பி பட்டமும் பெற்றார் பிறகு சட்டப்படிப்பில் பாரிஸ்டர் பட்டம் பெற்றார்.

படிப்பை முடித்து இந்தியா திரும்பிய அம்பேத்கர் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அது மட்டுமில்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் கிடைக்க போராட வேண்டும் என்றும் முடிவு செய்தார்.

1924 ஆம் ஆண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஒடுக்கப்பட்டோர் நல்வாழ்வு பேரவை என்ற அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி மற்றும் சமுதாய உரிமைக்காக போராடினார்.

ஆகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலை பெற்ற பிறகு காங்கிரஸ் அரசு அம்பேத்கரை சட்ட அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ளும்படி அழைத்தது அதன் பெயரில் விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும் இந்திய அரசியல் சாசன சபையின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

நவம்பர் 26 1949 ஆம் ஆண்டு அம்பேத்கர் தலைமையில்  இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரவு குழு நாடாளுமன்றத்திடம் சட்ட வரைவை ஒப்படைத்தது.

அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு குடிமக்களின் உரிமைகளுக்கு பல வகைகளில் பாதுகாப்பை அளிப்பதாக அமைந்ததோடு மட்டு மில்லாமல், இங்கு இது மிகச்சிறந்த சமூக வாகனம் என வரலாற்று ஆசிரியர்களால் போற்றப்பட்டது.

அம்பேத்கர் புத்தர் சமய கொள்கைகளின் மீது ஈடுபாடு கொண்டவர். இலங்கையில் நடைபெற்ற புத்தகவியல் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர், உலக பௌத்த சமய மாநாடுகளிலும் கலந்து கொண்டார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் லட்சக்கணக்கான மக்களோடு புத்த சமயத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் எழுதிய புத்தரும் அவரின் தர்மமும் என்னும் புத்தகம் அவரது மறைவுக்குப் பின் 1957ஆம் ஆண்டு வெளியானது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்த அம்பேத்கர் 1956 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் காலமானார். அவருடைய மறைவுக்கு பின் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது 1990 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கரின்125 அடி உயர வெண்கல சிலைய திறப்பு விழா பிரம்மாண்டமான முறையில் ஏப்ரல் 14, 2023 அன்று தெலங்கானாவில் நடைபெற்றது. அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் சிலையை திறக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com