
புஷ்பா கல்லூரியில் படித்து கொண்டு இருந்தார். கல்லூரியில் நடக்கும் விளையாட்டு போட்டிகளில் நிச்சயமாக கலந்து கொள்வார். அவர் இரண்டே இரண்டு விளையாட்டுகளை மட்டும் தேர்வு செய்தார்.
நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஒட்ட பந்தயம்.
புஷ்பா உயர்ந்தவர் 6 அடி. அவர் மிகவும் புத்திசாலி. ஆம். அவர் தேர்வு செய்த இரண்டு போட்டிகளும் ஒன்றொன்றுக்கு தொடர்பு உடையவை. நீங்கள் எவ்வளவு வேகத்தில் வருகிறீர்களோ அந்த அளவுக்கு நீளம் தாண்ட முடியும்.
ஆனால் அவரது லட்சியம் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் புதிய ரெக்கார்டு உருவாக்க வேண்டும் என்பதே. 9.6 நொடிகள் தான் ஒலிம்பிக் சாதனை.
போட்டிக்கு முன்னே நீளம் தாண்டுதல் மற்றும் ஒட்டப்பந்தயத்தில் தனது கவனத்தை திருப்பினார். உலக ரெக்கார்டை முறியடிக்க வேண்டும் என நிச்சயித்தார்.
ஒரு ரகசியத்தை தனக்கு உள்ளேயே வைத்து இருந்தார். அதை யாரிடமும் சொல்லாமல் இருந்தார். தனது 100 மீ பந்தயத்திற்கு நீளம் தாண்டுதல் நிச்சயமாக உதவும் என்று உறுதியாக நினைத்தார்.