பாரதியார்
பாரதியார்

கவிதை - பாரதியும் பல்வகைத் தமிழும்!

11-12-2023 பாரதியார் பிறந்த நாள்!
Published on

பாட்டுக் கொரு புலவனாம் பாரதி - நம்

பாரத நாட்டினைப் போற்றிப் பாடியது

பண்புத் தமிழினிலே!

அன்னை பராசக்தியை அன்புடனே ஆராதித்து

அர்ச்சித்து பாடியது

அமுதத் தமிழினிலே!

பால் வடியும் கண்ணணை நினைத்து

பக்தி பரவசத்துடன் பாடியது

பல்சுவைத் தமிழினிலே!

பெண்மையைப் போற்றி போற்றிப்

பெருமையாக பாராட்டி பாடியது

பாங்கான (மென்மை) தமிழினிலே!

இதையும் படியுங்கள்:
இப்படி ஒரு முறை மசாலா ஆப்பம் செஞ்சி பாருங்க!
பாரதியார்

பகைவர்களை வெற்றிகொள்ள - பயமின்றி

கர்ஜித்து பாடியது

பார் போற்றும் வீரத்தமிழினிலே!

பாகுபாடின்றி பல்வேறு கருத்துகளை

பாரத மண்ணிற்காக அன்றே பாடிய

பாட்டுக்கொரு புலவன் பாரதி -

வாழிய வாழியவே!

logo
Kalki Online
kalkionline.com