தலைமுடி முதல் கால் முடி வரை: அதை அகற்றினால் உங்கள் உடலுக்கு என்ன ஆகும்?

human body hair
human body hairImg credit: AI Image
Published on
Kalki Strip
Kalki Strip

தலையில் வளரும் முதல் கால் விரலில் வளரும் முடி வரை அனைத்தையும் ‘அழகு’ என்ற வட்டத்திற்குள் கொண்டு சென்றுவிட்டோம். அதனால் அதை முற்றிலும் அகற்றவும் அல்லது தேவைக்கேற்றவாறு குறைத்தும் கொள்கிறோம். உண்மையில் அழகைத் தாண்டி இதன் தாக்கம் எப்படி இருக்கும்?

தலை முதல் பாதம் வரை:

முடி (human body hair) என்றால் பெரும்பாலும் ஒரு அழகு அம்சமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உண்மையில் அது வளரும் இடத்தைப் பொறுத்து பல்வேறு உயிரியல் செயல்பாடுகளுக்கு (biological functions) உதவுகிறது. அப்படி உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள முடி மனிதர்களின் வாழ்விற்கு (human survival and comfort) பல நுட்பமான நன்மைகளை வழங்குகிறது.

தலையில் உள்ள முடி உடலுக்குத் தேவையான வெப்பத்தைப் பராமரிக்க (thermal insulation) உதவுகிறது. இதனால் மூளை அதிக வெப்பம் அல்லது குளிரிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. இதோடு புற ஊதா கதிர்வீச்சுக்கு (ultraviolet radiation) எதிராக ஒரு இயற்கையான கேடயமாகவும் செயல்பட்டு, சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளின் அபாயத்தையும் குறைக்கிறது.

புருவங்களிலும், கண் இமைகளில் இருக்கும் முடிகள் பாதுகாப்புத் தடைகளாக செயல்படுகின்றன. காரணம், புருவங்கள் (Eyebrows) வியர்வையையும், மழையையும் கண்களில் படாமல் திசை திருப்புகின்றன. அதே சமயம் கண் இமைகள் (eyelashes) தூசி, சிறிய துகள்கள் மற்றும் பூச்சிகளிலிருந்து கண்களைப் பாதுகாக்கின்றன. தாடி, மீசை போன்ற முகத்தில் வளரும் முடிகள் கூட சில நேரங்களில் தலையில் இருக்கும் முடிபோல் உடலில் வெப்பத்தைப் பராமரிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
முடி கொட்டுவதை நிறுத்தி, காடு போல வளரச் செய்யும் 5 இயற்கை ரகசியங்கள்!
human body hair

என்னதான், உடல் முடிகள் மெல்லியதாக (Thinner) இருந்தாலும்; உடலில் பல உணர்ச்சிப் புலன்களுக்கு (sensory perception) அவைதான் பங்களிக்கின்றன. நம் சருமத்தின் மூலம் ஊடுருவி நரம்பு (nerve) முனைகளுடன் இணைக்கப்பட்ட சிறிய முடிகள் காற்றில் (Airflow) ஏற்படும் சிறிய மாற்றங்களை நமக்கு உணர்த்துகின்றன. சருமத்தின் மேல் இருக்கும் பூச்சிகள் (கொசுக்கள்) குறித்தும் நம்மை முன்கூட்டியே எச்சரிக்கின்றன.

அக்குள், இடுப்பு (armpits, groin) போன்ற பகுதிகளில் உள்ள முடிகள் உடல் அசைவின்போது ஏற்படும் உராய்வைக் (Friction) குறைகின்றன. இதோடு ஒரு மனிதர்கள் உடலில் சுரக்கும் தேவையான ரசாயனமான (Chemical) ஃபெரோமோன்களை (pheromones) பரப்ப உதவுகின்றன. மூக்கில் (Nose) வளரும் முடிகூட காற்றில் உள்ள துகள்களை வடிகட்டி, தூசிகள், நோய்க்கிருமிகள் நம் சுவாச மண்டலத்திற்குள் நுழைவதைத் தடுக்கின்றன.

உடலில் ஒட்டு மொத்த முடியையும் நீக்கினால்?

உடலில் உள்ள முடிகளை (human body hair) முற்றிலும் அகற்றினால் மேலே குறிப்பிட்ட நன்மைகளை நாம் முழுமையாக இழக்கப் போவதில்லை; ஆனால் அவை குறையக்கூடும். உதாரணமாக மூக்கு முடிகளை அகற்றுவது காற்று வடிகட்டுதலின் (Filtration) செயல்திறனைச் சற்று குறைக்கலாம். அதே சமயம் கை இடையில் முடி இல்லையேல் அது உராய்வை அதிகரிக்கலாம் அல்லது வியர்வை குறைய வேண்டிய (Evaporate) நேரத்தை மாற்றியமைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
கூந்தல் வேர்களை வலுப்படுத்தும் இயற்கையின் அருமருந்து!
human body hair

இருப்பினும் இப்போதுள்ள நவீன சுகாதாரப் பழக்க வழக்கங்களும், ஆடைகளும் பெரும்பாலும் இந்த இயற்கையான அசௌகரியங்களை ஓரளவு ஈடுசெய்கின்றன. அதாவது முடி இல்லை என்றாலும் அதன் தாக்கம் பொதுவாக மிகக் குறைவாகவே இருக்கும்.

இப்படி மனிதனின் பாதுகாப்பு, உணர்ச்சி போன்ற செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் முடி என்பது ஒரு தேவையற்ற அம்சம் அல்ல; அது இயற்கையால் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட உயிரியல் கருவியாகும். மனிதர்கள் அது இல்லாமல் வசதியாக வாழ முடிந்தாலும்; அதன் நோக்கத்தைக் கொஞ்சம் புரிந்துகொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com