உயிர் காக்கும் வண்ண ஒளிகள்... சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினம்!

உயிர் காக்கும் வண்ண ஒளிகள்... சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினம்!
Published on

“நில் கவனி செல்” பயணம் தொடர்பான இந்த வார்த்தைகளை எத்தனை பேர் அலட்சியப் படுத்துகிறார்கள் தெரியுமா? அவர்களுக்கும் தெரியும் இந்த அலட்சியத்தின் மூலம் தங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்பது. ஆயினும் இந்தத் தவறை இன்னும் பலர் செய்தே வருகின்றனர். அவர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை பற்றிய விழிப்புணர்வைத் தரவே சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினம் கடைப் பிடிக்கப் படுகிறது .

      வரமாக வந்த வாழ்க்கையில் கண்மூடித்தனமான செயல்பாடுடன் வேகமாகச் சென்று அழிவைத் தேடிக் கொள்வதை விடுத்து பொறுப்புடன் நிதானமாக வருவதை எதிர்கொண்டு வாழப் பழகினால் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வரும். இதே போலதான் பயணங்களும் வேகத்தை விட சிறந்தது விவேகம் எனும் சொற்றொடர் உண்டு. ஆம் . விவேகத்துடன் சாலைப் பயணத்தின்போது பாதுகாப்பு தரும் போக்குவரத்து விளக்குகளுக்கு கட்டுப்பட்டு நடந்தாலே பல விபத்துகள் தடுக்கப்படும்.

     மனிதன் ஆதிகாலத்தில் இருந்தே பயணம் நிமித்தம் பலவிதமான கட்டுப்பாடுகளை காலத்திற்கு ஏற்ப கடைப்பிடித்து வந்தாலும் அறிவியல் முன்னேற்றங்கள் பெருகிய இந்தக் காலத்தில் முதன் முதலில் இந்த போக்குவரத்துக்கான எச்சரிக்கை ஒளி விளக்குகளை பொருத்தியவர் ஜேம்ஸ் ஹோக் என்பவரே. 1914 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று அமெரிக்காவின் நகரான ஓஹியோ கிளீவ்லாண்ட்ல் உள்ள  யூக்ளிட் அவென்யூவில் மூலையில் ஜேம்சால் பொருத்தப்பட்ட மின்சாரத்தில் இயங்கும் முதல் போக்குவரத்து விளக்கு என்று கருதப்படுகிறது. அதில் நான்கு சிவப்பு விளக்குகள் மற்றும் பச்சை விளக்குகளுடன் ஒளி எப்போது மாறப்போகிறது என்பதற்கான கால அளவு கொண்ட ஒலி எழுப்பும் கருவியுடன் வடிமைத்து பொருத்தினார். இது அருகில் உள்ள இடத்தில இருந்த மனிதரின் கைகளால் இயக்கும் வண்ணம் அப்போது இருந்தது காலங்கள் மாற மாற ஆட்டோமேடிக்காக இயங்கும் விளக்குகள் தற்போது சிக்னல் எனும் பெயரில் சாலைக் கம்பங்களில் பொருத்தப் பட்டு வருகிறது. ஆனாலும் முதன் முதலில் ஜேம்சால் பொருத்தப் பட்ட இந்த தினத்தையே “சர்வதேச போக்குவரத்து விளக்குகள் தினமாக” உலகெங்கும் அனுசரிக்கிறோம்.

     அதிக நெரிசலற்ற கிராமப்புற மக்களுக்குத் தேவைப்படாத போக்குவரத்து விளக்குகள் மக்கள் தொகை மிகுந்த பெருநகர மக்களுக்கு அவசியம் தேவைப்படும். அறிவியல் வழி வந்த ஒரு கருவியாகும். இரு சக்கர வாகனமோ நான்கு சக்கர வாகனமோ கற்றுக் கொண்டு உரிமம் வாங்கும் முன் அவசியம் இந்தப் போக்குவரத்து விளக்குகள் பற்றியத் தெளிவை புரிய வைப்பார்கள். இந்தப் போக்குவரத்து விளக்குகளின் ஒளி பல்வேறு வாகனங்கள் ஒட்டுபவரையும் பாதசாரிகளாக சாலையைக் கடப்போர்களுக்கும் பெரும் பாதுகாப்பாக உள்ளது என்றால் மிகையில்லை.

      வாகனப் பயன்பாடுகள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில் நகரம் மற்றும் பெருநகரங்களில் போக்குவரத்து விளக்குகள் ஒவ்வொரு நகரின் முக்கிய மூன்று நான்கு சாலைகள் சந்திப்புகளிலும் நிச்சயம் பொருத்தப் பட்டிருக்கும் .நீண்ட ஒய்யார கம்பத்தில் மின்சாதன கருவிகளால் சிவப்பு மஞ்சள், பச்சை என மூன்று வண்ணங்களை 24 மணி நேரமும் ஒளிரவிட்டபடி வாகன போக்குவரத்து சீர் செய்து கொண்டே இருக்கும் இந்த விளக்குகள். இதில் சிவப்பு கலர் ஒளிந்தால் சாலையின் எல்லைக்கோட்டிற்குள் வாகனங்களை நிறுத்தவும், மஞ்சள் கலர் ஒளிந்தாள் புறப்பட தயாராகவும், பச்சைக் கலர் ஒளிர்ந்தால் புறப்பட்டுச் செல்லலாம் எனவும் உள்ள சாலைப் போக்குவரத்தின் முக்கிய விதியை வாகன ஓட்டிகள் அறிந்ததே.

     போக்குவரத்துத்துறை காவலர்களிடமிருந்து தப்பித்து இந்த விளக்குகளின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் செல்லும் வாகனங்களுக்கு அபராதம் போன்றவைகளை விதித்தாலும் வேகமாக செல்வதையே குறிக்கோளாக இந்த விளக்குகளைக் கண்டு சலித்து நின்று விளக்கு ஒளிரும் முன்னே வேகமாக செல்வோரும் தங்களுக்கு மட்டுமில்லை சுற்றி இருப்போரின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். இதைப் புரிந்து கொண்டு நம் பாதுகாப்புக்கு உதவும் இந்த விளக்குகளை மதித்து நடப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com