உலகில் இப்படியும் பல நாடுகளா?

Country without beach
Country
Published on
kalki strip

உலகில் கடலும் கடற்கரையும் இல்லாத பல நாடுகள் உள்ளன என்றால் ஆச்சரியமாக உள்ளதா. ஆம்! உலகில் கடலும் கடற்கரையும் இல்லாத நாடுகள் 44 நாடுகள் உள்ளன. ஒரு நாட்டில் கடலும் கடற்கரையும் இருந்தால் நல்ல பொழுதுபோக்காக இருக்கும். கடலானது ஒரு நாட்டிற்கு வர்த்தகப் போக்குவரத்திற்கும் போர்க்காலத்தில் பயன்படுத்துவதற்கும் அவசியமானது.

மீன்பிடித்தல், கடல் சார் உணவுகள், இவை கிடைப்பதில்லை. மீன்களுக்கும் கடல் சார் உணவுகளுக்கும் மற்ற நாடுகளை எதிர்பார்த்து தான் இருக்க வேண்டி உள்ளது. அதே போன்று வர்த்தகத்திற்கும் போர் நடவடிக்கைகளுக்கும் கடற்கரை இல்லாதது மிகுந்த சிரமமாக உள்ளது. இவர்கள் பெரும்பாலும் நான்கு புறமும் நிலப்பரப்பு கொண்டு உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நாடுகள் அண்டை நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்து இருக்க வேண்டிய நிலையில் உள்ளன. கடற்கரை இல்லாததால் பொழுதுபோக்கு அம்சத்திற்கு சற்று சிரமமாகத்தான் இருக்கும். ஆப்கானிஸ்தான், ஆர்மேனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பூட்டான், புருண்டி, செக் குடியரசு, எத்தியோப்பியா, அங்கேரி, லாவோஸ் கிர்கிசுத்தான், நேபாளம் இப்படி பல நாடுகள் உள்ளன. உலக அளவில் ஆப்பிரிக்கா ஐரோப்பா கஜகஸ்தான் போன்றவை பெரிய நாடுகள் ஆகும். சுவிட்சர்லாந்தில் கடல் இல்லாவிட்டாலும் செல்வ செழிப்போடு உள்ளது.

கடற்கரை இல்லாத நாடுகளுக்கு அதிக போக்குவரத்து செலவுகள் ஏற்படுகிறது. உலகச் சந்தை இயற்கை வளங்கள் இவற்றுக்கு பிற நாடுகளின் உதவி தேவை. கடற்கரை இல்லாததால் ராணுவ வரம்புகளும் குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்து வடுகிறது.

இதையும் படியுங்கள்:
தேங்காய் ஓடு இனி குப்பை இல்லை! இதை செஞ்சா நீங்கதான் கெத்து!
Country without beach

ஐரோப்பாவில் 14 நாடுகள், ஆப்பிரிக்காவில் 16 நாடுகள் தென் அமெரிக்காவில் இரண்டு நாடுகள் ஆசியாவில் 12 நாடுகள் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. கஜகஸ்தான் உலகத்தில் மிகப்பெரிய நிலப்பரப்பு கொண்ட நாடாக கருதப்படுகிறது. 2.6 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட பகுதியாகும். சவுதி அரேபியாவில் ஏரியோ நதியோ கிடையாது.

நிலத்தடி நீரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். செல்வ செழிப்போடு இருந்தாலும் பெரும்பகுதி தண்ணீருக்கு செலவு செய்யப்படுகிறது. இப்படி உலகில் 44 நாடுகள் கடலும் கடற்கரையும் இல்லாமல் செழிப்போடு இருந்தாலும், உலக வர்த்தகத்திற்கும் கடல் சார் உணவுகளுக்கும் போர்க்காலத்திற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நாடுகளும் இருக்கின்றன. மற்றபடி எந்தப் பிரச்னையும் இல்லாமல் செல்வ செழிப்போடு பல நாடுகள் உள்ளன என்றால் வியப்பாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com