

மாதங்கியின் செல் "பருவமே புதிய பாடல் பாடு" என்று ரிங்டோனில் ஒலிக்கும் போது மாலை மணி 6.
எடுத்தாள்.
"ஹாய் மாதங்கி! நான் ராம்நாத்."
"வாட் ஏ சர்ப்ரைஸ் பாஸ்! எப்போது மும்பையிலிருந்து வந்தீங்க?"
"காலைல தான் வந்தேன், தாஜ் ஹோட்டல் பிசினஸ் மீட்டிங் ஓவர். இப்போ ஃப்ரீ தான்."
"ஆமாம் நீ இப்ப எங்கே இருக்கே?"
"இங்கே தான் அசோக் பில்லர், மெட்ரோ ஸ்டேஷன் எதிர்ப்புறம் உள்ள பெட்ரோல் பங்க். காருக்கு பெட்ரோல் போட்டுகிட்டு இருக்கேன்."
"அட! நானும் அசோக்நகர் போஸ்டாபிஸ் வாசலில்..."
மாதங்கியும் ராம்நாத்தும், அந்தப் பிரபல ஹோட்டலில், ஒரு மூலையில் உள்ள டேபிளில் உட்கார்ந்தார்கள்.
மாதுளம் ஜூஸ் ஆர்டர் செய்தார்.
"என்ன மாதங்கி? ஹவ் ஆர் யூ?"
"உங்க புண்ணியத்தில நல்லா இருக்கேன் பாஸ்."
“பார்த்தாலே தெரியுது கொஞ்சம் பூசினாப்பல தான் இருக்கே!”
"போங்க பாஸ்!" முகம் வெட்க்கத்தைக் காட்டியது.
"நாளை மதியம் 12 மணிக்கு தான் எனக்குப் பிளைட். அது வரைக்கும் கம்பனி கொடுக்க முடியுமா?"
சற்று நேரம் யோசித்தாள்.