

மேனேஜரிடம் திரும்பினார் கதிர். விசாரணைத் தொடர்ந்தது...
"மானேஜர் நீங்க எப்ப அவர் ரூம் போனீங்க?"
"எங்க லாட்ஜ்ல் செக் அவுட் மதியம் 12 மணிக்கு சார். அவருக்கு 2 மணிக்குப் பிளைட்ன்னு முதல் நாள் செக் இன் போது சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அதோட இன்னொரு கிளையண்ட்க்கு, இந்த ரூம் அலாட் ஆனதால், அவர் ரூம் காலி பண்ண வேண்டிய நிலை. அப்போ காலை 07: 00 மணி. அவரை எழுப்ப காலிங் பெல் அடிச்சேன். திறக்கல, சரி நல்லா தூங்கிகிட்டு இருப்பார், டிஸ்டர்ப் பண்ண வேண்டாம், கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்புவோம்ன்னு வந்துட்டேன். 10 மணிக்குக்கு மீண்டும் பெல் அடிச்சேன். திறக்கல! சந்தேகம் வந்து, உடனே கதவை ஓபன் பண்ணி போய்ப் பார்த்த பிறகு படுத்து கிடந்த அவரைப் பார்த்த போது, பேச்சு மூச்சு இல்லை. பக்கத்தில் இருக்கிற டாக்டரை கூட்டிகிட்டு காமிக்கும் போது, இது மாஸிவ் ஹார்ட் அட்டாக். இறந்து போய், 7 மணி நேரம் ஆயிடுச்சுன்னு சொன்னார். உடனே ஒங்களுக்குத் தகவல் சொன்னேன்."