

மாதங்கி அறிமுகத்துக்குப் பின் இன்ஸ்பெக்டர் சிந்துவிடம் விடியோ காலில் பேசும் போது...
"ஆமாம் சார் நான் ராம்நாத் சாருக்குக் கமிட்டாகி, மாதங்கி மேடம் போகசொன்னது உண்மை தான் சார்". ஆனா போக முடியலே! நான் பிளைட் புடிச்சு இரவு பத்து மணிக்கு இங்கே வந்துட்டேன். இங்கு அவசர வேலை. வர வேண்டிய சூழ்நிலை. நாளை மறுநாள் தான் சென்னை வருவேன்."
தன் ஆபீஸ் கேபின், தன் டிக்கெட், ரிடர்ன் டிக்கெட் எல்லாவற்றையும் ஸ்கேன் செய்து மெயில் அனுப்பி இருந்தாள்.
"உங்க இரண்டு பேரையும், தேவைப்படும்போது மீண்டும் விசாரிப்போம், இப்ப நீங்க போகலாம்.”
'மாதங்கியும் இல்லை சிந்துவும் இல்லை, வந்தது யார்? பணம் விலை உயர்ந்த பொருள்கள் அப்படியே உள்ளது. வந்தவள் பணத்துக்கோ, பொருளுக்கோ, ஆசைபடலை. போஸ்ட்மார்ட்டம் பண்ணிய டாக்டர் மாசிவ் ஹார்ட் அட்டாக் என்கிறார். கோபிநாத் இது இண்டுயூசட் மர்டர் என்கிறார். ஒரே குழப்பமா இருக்கே. ரூமில் எந்தத் தடயமும் இல்லையே? அந்த அதிகாலையில் அந்த பெண் திரும்பி போக வேண்டிய அவசியம் என்ன?...'
கேள்வி மேல் கேள்வி வந்து ராத்திரி முழுவதும் தூக்கமில்லாமல் தவித்தார்.