கூட்டம் கூட்டமாகத் திரியும் ஏமாற்று பேர்வழிகள்! உஷார் மக்களே!

வாசகர் அனுபவம்:
கூட்டம் கூட்டமாகத் திரியும் ஏமாற்று பேர்வழிகள்! உஷார் மக்களே!

- ஆர். நாகராஜன்

முகநூல், மற்றும் யூடியுப் பதிவுகளில் பல மாதங்களாக பல்வேறு கம்பெனிகள் பெயரில், அனைத்து மொழிகளிலும் ஒரு நபா் பேசுகிறார். ’தங்களிடம் இருக்கும் பழைய நாணயங்கள், மற்றும் ருபாய் நோட்டுகள், விஷ்ணுமாயா காளி படம் பொறித்த 5₹ காயின்கள் நல்ல விலைக்கு வாங்கப்படும்’ என விளம்பரம் செய்வதோடு வாட்ஸ்ஆப் நம்பரும் வெளியிடுகிறார்கள்.

விளம்பரத்தில் குறிப்பிட்ட நம்பருக்கு வாட்ஸ்ஆப்பில் பேசினால் தழிழில் தெளிவாக ஒரு நபா் பேசுகிறார். 

  ‘எங்களுக்கு ஹைதராபாத்’ எனச் சொல்லி, நமது ஊரைக் கேட்கிறார்கள். 

நாம் தமிழ்நாடு மற்றும் மாவட்டம் பெயா் சொன்னவுடன், ‘சரி, தங்களிடம் உள்ள பழைய நோட்டு, காயின்களை போட்டோ எடுத்து அனுப்புங்கள். தகுதியானதாக இருந்தால், பேசுகிறோம்’ எனச் சொல்வார்கள். நாம் அவா்கள் சொன்னபடி அனுப்பினால் அதைப் பார்த்தவுடன் ‘நான்கு லட்சம்’ என குறுஞ்செய்தி வருகிறது.

பிறகு தொடா்புகொண்டால், ‘நாங்களே பணத்துடன் உங்கள் ஊருக்கு நாலு பேரை அனுப்பிவைப்போம். அவர்கள் நோட்டு, காயின்களை சோதனை செய்துவிட்டு பணத்தை கொடுப்பார்கள்’ எனக் கூறுவார்கள், போன் கட் ஆகிவிடும்.

பின்னா் நாம் பலமுறை போன் போட,  சற்று தாமதமாக எடுத்து, ‘கொல்கத்தா கம்பெனியில் ஓகே சொல்லி விட்டார்கள்.  நீங்கள் தங்களுடைய ஆதார் கார்டு மற்றும் போட்டோ அனுப்புங்கள். அதோடு 1200 ரிஜிஸ்டரேஷன் பீஸ் அனுப்புங்கள். நாளையே எங்களது கம்பெனி நபா்கள் தங்கள் ஊருக்கு வந்து லட்சக்கணக்கில் பணம் தருவார்கள்’ என ஆசை வார்த்தை சொல்வார்கள் .

இதை நம்பி ஆதார் கார்டையும், போட்டோவையும், பணத்தையும் அனுப்பினால், அவ்வளவுதான் தகவலே வராது. இன்னும் சில நிறுவனங்கள் நமது ஆதார் கார்டு போட்டோவைப் பயன்படுத்தி தனியார் வங்கியில் கடன் கூட வாங்கிவிடுவார்கள். இந்தக் கூத்தும் நடந்திருக்கிறது.  இப்படிப்பட்ட ஏமாற்று போ்வழிகள் நிறைய கூட்டம் கூட்டமாக திரிகிறார்கள்.  நாம்தான் அவா்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

நான் இதிலுள்ள உண்மைகளை கண்டுபிடிக்கவே  அவா்களிடம் தொடா்புகொண்டேன். 

‘முன்பணம் 1200 அனுப்ப இயலாது. நீங்கள் நேரில் வாருங்கள். செலவுத்தொகை போக மீதி தொகையை கொடுங்கள்’ எனக் கேட்டேன்.  ‘பதிவுக்கட்டணம் அனுப்பினால்தான் மேற்கொண்டு பேசுவோம்’ என இணைப்பைத் துண்டித்தார்கள். 

நான் இதுகுறித்து பலருக்கும் முகநூலில், மற்றும் சம்பந்தப்பட்ட கம்பெனி செய்திகளிலும் கமெண்ட் பாக்ஸில் விழிப்புணர்வு செய்தியை பதிவிடுகிறேன்.  பலா் எனக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். 

அரசாங்கம் இதுபோன்ற போலி விளம்பரங்களுக்கு தடை விதிப்பதோடு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘ஏமாறுபவா்கள் இருக்கும்வரை ஏமாற்றும் நபா்கள் இருக்கத்தானே செய்வார்கள்’.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com