
ஓவியங்கள்: பிரபுராம்
"தலைவருக்கு பொங்கல்னா ரொம்ப இஷ்டம்!"
"தீபாவளி பிடிக்காதா..?"
"அய்யோ, நான் சொன்னது, சாப்பிடற பொங்கல் சார்... !"
*************************************
"தீபாவளி முடிந்த பிறகுதான் சார் என் மனைவியை காணும்.?"
"அப்படின்னா 2, 3 நாள்ல வந்துடுவாங்க சார்... தீபாவளி புடவையை பிரெண்ட்ஸ் கிட்ட காட்ட போயிருப்பாங்க....!"
-விரேவதி, தஞ்சை
*************************************
ஏன் மாலா, தீபாவளி ஷாப்பிங் முடிச்சிட்டு வர இவ்வளவு நேரமாச்சு!
உங்கம்மாவுக்கு மிகவும் விலைக்குறைந்த புடவை எடுக்க நிறைய கடைகள் ஏறி இறங்க வேண்டி இருந்ததுங்க...
*************************************
உன்னோட மனைவி டி.வி. சீரியல் தானே பார்ப்பா, இப்ப ஏன் நியூஸ் பார்க்கிறா?
நியூஸ் வாசிக்கிற பொண்ணு கட்டிக்கிட்டு இருக்கிற பட்டுப்புடவையில எது பெஸ்ட்னு பார்த்து தீபாவளிக்கு வாங்கத்தான்!
*************************************
தீபாவளி நாளான இன்னைக்கு புலவர் ஏன் அரண்மனைக்கு பாட வரவில்லை அமைச்சரே?
மகாராணி செஞ்ச தீபாவளி பலகாரங்களை நீங்க பரிசாக தந்து விடுவீங்களோன்னு பயந்துட்டாரு மன்னா!
*************************************
தகவல் அறியும் உரிமை சட்டத்துல இதையெல்லாம் போய் கேப்பாங்களா?
அப்படி என்ன கேட்டா மாலா?
தீபாவளிக்கு பக்கத்து வீட்டுக்காரி கலா எத்தனை பட்டுப் புடவை எடுத்திருக்கான்னுதான்!
*************************************
தலைவர் எதுக்கு நொந்துக்கிறார்?
எதிர்க்கட்சியை உடைச்ச தலைவரால மனைவி செஞ்ச மைசூர்பாக்கை உடைக்க முடியலையாம்!
*************************************
தீபாவளி அன்னிக்கு தலைவர் வீட்டுக்கு ரெய்டு நடத்த வந்த அதிகாரிகள் ஏன் ரெய்டு நடத்தாம திரும்பிப் போயிட்டாங்க?
தீபாவளி பலகாரங்களை தலைவர்தான் செஞ்சாருன்னு கேள்விப்பட்டதும் போயிட்டாங்களாம்.
-எச். சீதாலக்ஷ்மி, ஆலுவா, கேரளா
*************************************
ஒளவையார் இப்ப வந்து தீபாவளி கொண்டாட பட்டாசு கேட்டா என்ன சொல்லி இருப்பே ?
சுட்ட பட்டாசு வேணுமா சுடாத பட்டாசு வேணுமா ன்னு கேட்டு இருப்பேன் !!!!
*************************************
நம்ம வீட்டுப் பட்டாசை வெடிக்காமே எதுக்கடா பக்கத்து வீட்டுப் பட்டாசை வெடிக்கரே ?
பக்கத்து வீட்டுப் பட்டாசும் வெடிக்குமே !!!!
-பீ .எஸ். நரசிம்ம மூர்த்தி, சென்னை.