
வேலை நேரத்துல பட்டாசு வெடிச்சு தீபாவளி கொண்டாடினதுக்கு உன்னை வேலையிலிருந்து தூக்கிட்டாங்களா, எங்கே வேலை பார்த்துக்கிட்டிருந்தே?
பட்டாசுக் கடையில...!
****************************
தலைவரை பட்டாசு கொளுத்தி குடோன் ஓபன் பண்ணச் சொன்னது பெரிய பிரச்னையா போச்சு !!
ஏன் ? என்னாச்சு ?
பருத்தி மூட்டை குடோன் ஆச்சே.!!!
-பீ .எஸ். நரசிம்ம மூர்த்தி, சென்னை.
---------------------------------------------------
"லெட்சுமி வெடின்னா எங்க தாத்தா ரொம்ப நடுங்குவாரு..!"
"என்ன பயம் அதுல ?"
"பாட்டி பேரு, " லெட்சுமி" ...!"
****************************
"பாழாப்போன அந்த வெடியை பத்த வச்சதுல என் பல்லெல்லாம் கொட்டிப் போச்சுங்கய்யா!"
"அப்படியென்ன வெடி அது...?" "ஒத்த வெடிதாங்க... பீடின்னு நினைச்சு பத்த வச்சிட்டேன் டாக்டரய்யா...!"
****************************
"என்னோட மாப்பிள்ளைக்கு வெடின்னாலே ரொம்ப பயம் போல....!"
அப்படியா?" "அப்புறம்..?"
"ஊசிப் பட்டாசை மட்டும் ஹெல்மெட் போட்டுக்கிட்டு வெடிச்சாரு....!"
-விரேவதி, தஞ்சை
---------------------------------------------------
பதுங்குக்குழியில் மன்னர் கூட மகாராணியும் இருக்காங்கன்னு எப்படிச் சொல்றே?
தீபாவளிப் பலகாரத்தோட வாசனை வருதே!
****************************
டாக்டரை மாப்பிள்ளையா கிடைச்சதுக்கு மாலா ரொம்ப பீத்திக்கிறாள்னு எப்படிச் சொல்றே?
தீபாவளிக்கு ஒரே "ஊசி " வெடியா வெடிச்சுத் தள்ளுறாளே!
****************************
மன்னர் புலவர் சொன்னதைக் கேட்டு டென்ஷன் ஆயிட்டாரா, அப்படி என்ன சொன்னார்?
பாட்டு பாடினதுக்கு பொற்காசு கூட தீபாவளி போனஸும் வேணுமாம்!
****************************
அந்த ஜவுளிக்கடையில் எதுக்கு பட்டாசு வெடிச்சு கொண்டாடுறாங்க?
அஞ்சே நிமிஷத்துல ஒரு பொண்ணு பட்டுப் புடவையை செலக்ட் பண்ணி எடுத்துடுச்சாம்!
****************************
என் மனைவிக்கு பட்டுச்சேலை எடுக்கணும். கடை எத்தனை மணி வரை திறந்திருக்கும்?
இரவு 11 மணிவரைக்கும் சார்!
சரி, கடை சாத்தின பிறகு வந்து எடுத்துக்கிறேன்!
-ஆர். கீதா, ஆலுவா, கேரளா