கணவன்: என்ன இது, இந்த சோப்பு கரையவும் மாட்டேங்குது, நுரையும் வர மாட்டேங்குது.
மனைவி: அரை கிலோ நெய்யில செஞ்சது அப்படித்தான் இருக்கும். தீபாவளிக்கு செஞ்ச மைசூர் பாகுங்க! இப்படி கூறுகெட்டதனமா இருக்கீங்களே!
*******************************
மனைவி: தீபாவளிக்கு டிரஸ் வாங்கணும். லீவு போட்டுட்டு வாங்க கடைக்குப் போகலாம்.
கணவன்: நான் ஆபீஸ் போகணும். என்னால வர முடியாது. பர்சேஸ் பண்ணிக்கப்புறம் சொல்லு ராத்திரி நேரா ஆபீஸ்ல இருந்து வந்து உன்னை கூட்டிட்டு போறேன்!
*******************************
கணவன்: புடவை எடுக்கப்போன இன்னும் வரல ராத்திரியாகப் போகுதே என்ன பண்ணிட்டு இருக்க?
மனைவி: சேல்ஸ்மேன் பாவங்க! எனக்காக எடுத்து போட்ட சேலைகள் மலை போல குவிஞ்சிருக்கு. அவருக்கு ஹெல்ப் பண்ண கூட மடிச்சுகிட்டு இருக்கேன்!
*******************************
அம்மா: ஏண்டா தீபாவளியும் அதுவுமா எண்ணெய் தேய்ச்சு குளிக்காம படம் பார்க்க கிளம்புற?
மகன்: இன்னிக்கு எங்க ஹீரோவோட படம் ரிலீஸ் ஆகிறது. எப்படியும் கட்டவுட்டுக்கு எண்ணெய் ஷாம்பு போட்டு அபிஷேகம் பண்ண போறோம் அங்கேயே குளிச்சிக்கிறேன்மா!