காந்திஜியை மையமாக வைத்து வந்த அசத்தல் திரைப்படங்கள் பற்றித் தெரியுமா?

ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு தினம்!
காந்திஜி
காந்திஜி
Published on

காத்மா காந்தி தன் வாழ்நாளில் பார்த்த ஒரே திரைப்படம் 1943 ம் ஆண்டு விஜய் பட் இயக்கத்தில் வெளியான "ராம ராஜ்யா' என்ற ஹிந்தி திரைப்படம் தான். 1944ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி மும்பை ஜூஹூவில் ஒரு பிரத்யேகமான தியேட்டரில் தனிக் காட்சியாக காந்திஜிக்கு அந்தப் படம் போட்டு காட்டப்பட்டது. அப்போது அவருக்கு 74 வயது. ஆரம்பத்தில் 40 நிமிடங்கள் மட்டுமே படம் பார்க்க காந்தி ஒத்துக்கொண்டார். ஆனால்   90 நிமிடங்கள் அமர்ந்து படத்தை பார்த்தார் காந்தி. அன்றைய தினம் அவர் மெளனவிரதத்தில் இருந்தார்.

ராம ராஜ்யா
ராம ராஜ்யா

காந்தியை பற்றிய ஆவணப்படங்கள்தான் முதலில் வெளி வந்தது. அதிலும் முதலில் வந்தது தமிழில்தான். "மகாத்மா காந்தி ' என்ற ஆவணப்படம் தமிழ் மொழியில் ஏ. கே. செட்டியரால் வெளியிடப்பட்டது. இதுவே 1948ல்  சுதந்திர தினத்தில் புதுடெல்லியில் ஹிந்தியில் வெளியிடப்பட்டது.  பின்னர் காந்தி நினைவு நிதி அமைப்பு மற்றும் இந்திய பிலிம் டிவிசன் இணைந்து 5 மணி நேரம் ஓடும் கருப்பு வெள்ளை ஆவணப்படம் " மகாத்மா லைஃப் ஆப் காந்தி' காந்தியை மையமாக கொண்ட நியூஸ் ரீல்களில்ன் தொகுப்பு வெளியானது.

காந்தியை பற்றிய முதல் திரைப்படம் "நைன் ஹவர்ஸ் டூ ராம் '1963ல் கனடா இயக்குநர் மார்க் ராப்சன் இயக்கத்தில் வெளியானது. கோட்சேயின் வாழ்க்கையில் நடந்த 9 மணி நேர சம்பந்தப்பட்ட கதை . இதில் காந்தியாக ஜே. எஸ். காஷ்யப்  என்பவர் நடித்திருந்தார்.

காந்தியின் மறைவுக்கு பிறகு அவர் பற்றிய பல திரைப்படங்கள் வெளியானது. அதில் குறிப்பிடும் வகையில் இருந்த திரைப்படம். 1982ல் ஆங்கிலத்தில் வெளிவந்த காந்தியின்  வாழ்க்கை வரலாற்றினை மையமாக கொண்ட " காந்தி' திரைப்படம். இங்கிலாந்து இயக்குநர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கத்தில் ஆங்கில நடிகர் பென் கிங்ஸ்லி காந்தியாக நடித்தார். காந்தியின் நியூஸ் ரீல்களை ஐந்து நிமிடங்கள் பார்த்தே தான் காந்தியாக நடித்ததாகவும், அதோடு காந்தியை பற்றிய பல நூல்களை படித்தும் தன்னை நடிக்க தயார் படித்துக் கொண்டதாகவும் பென் கிங்ஸ்லி  குறிப்பிட்டுள்ளார்.

நைன் ஹவர்ஸ் டூ ராம்
நைன் ஹவர்ஸ் டூ ராம்

காந்தி திரைப்படம் வெளிவந்த ஆண்டே 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது. அதோடு உலகெங்கும் வெளியாகி 27 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. காந்தி திரைப்படத்தில் தான் உலகிலேயே அதிக துணை நடிகர்கள் நடித்தார்கள். இதில் வரும் காந்தியின் இறுதி ஊர்வல காட்சியில் 3 லட்சம் பேர் நடித்தார்கள்.

1993 ம் ஆண்டு கேதன் மேத்தா இயக்கிய 'சர்தார்' திரைப்படத்தில் அனுகபூர் காந்தியாக நடித்திருந்தார்.இவர் காமெடி நடிகர்,காந்தியின் நடை, உடை பாவனைகளை பார்த்து தான்  காந்தியாக நடித்ததாக குறிப்பிட்டார்.

1996 ம் ஆண்டு சியாம் பெனகல் இயக்கிய " தி மேக்கிங் ஆப் த மகாத்மா' எனும் படத்தில் ராஜித் கபூர் காந்தியாக நடித்திருந்தார். இத் திரைப்படம் காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கை பற்றியது. "மை எக்ஸ்பிரிமென்ட் வித் ட்ருத்' எனும் காந்தியின் புத்தகத்தை படித்த உந்துதல் காரணமாக காந்தியாக நடித்ததாக ராஜித் கபூர் குறிப்பிட்டிருந்தார்.

காந்தி' திரைப்படம்...
காந்தி' திரைப்படம்...

2000 ம் ஆண்டில் தேசப்பிரிவினையின் போது  வெடித்த மத வன்முறைகளை காட்டிய  நடிகர் கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான " ஹே ராம் ' திரைப்படத்தில் காந்தியாக நடித்தவர் நடிகர் நஸ்ருதீன் ஷா. இவர் தான் "காந்தி 'திரைப்படத்தில் காந்தியாக நடிக்க வேண்டியது. இவரைத்தான் காந்தியாக நடிக்க முதன்முதலாக " ஆடிசன்' பார்த்தார் ஆட்டன்பரோ  ஏதோ காரணமாக அது முடியாமல் போனது.

2006 ம் ஆண்டில் காந்தியின் ஆத்மாவால்  ஆட்கொள்ளப்படும் ரவுடி முன்னாபாய் கதையான ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளிவந்த "லகே ரஹோ  முன்னாபாய்' திரைப்படத்தில் காந்தியாக நடித்திருந்தார் திலிப் பிரபாவால்கர். இது நல்ல வசூல் செய்த திரைப்படம்.

இதையும் படியுங்கள்:
உங்களால் ஏன் Discipline-ஆக இருக்க முடியவில்லை தெரியுமா? 
காந்திஜி

2007ம் ஆண்டில் காந்திக்கும் அவரது மகன் ஹரிலாலுக்கும் இடையே உள்ள பிணக்குகளை பற்றிய கதையைக் கொண்ட பரோஸ்  அப்பாஸ்கானின் " "காந்தி மை பாதர்' எனும் திரைப்படத்தில் காந்தியாக நடித்திருந்தார் தர்ஷன் ஜாரிவாலா. இதற்காக சிறந்த சப்போர்ட்டிங் ஆர்டர் எனும் தேசிய விருது வாங்கினார். அனில் கபூர் தயாரித்த இந்த படம் மூன்று தேசிய விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.

2014ம் ஆண்டு சியாம் பெனகல் இயக்கத்தில் வெளியான "சாம்பிதான்' எனும் படத்தில் காந்தியாக நடித்தவர் நீரஜ்கபி, இவரே 2017 ம் ஆண்டு குரிந்தர் சதா இயக்கத்தில் வெளியான "வைஸ்ராய்ஸ் ஹவுஸ்' என்ற படத்திலும் காந்தியாக நடித்திருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com