எத்தனை பிரிவினைகளுக்கு இந்தியா ஆளானது தெரியுமா? பாகிஸ்தான் மட்டுமா?

India
India
Published on

வணிகம் செய்ய வந்தபோது நம் நாட்டின் அபிரிமிதமான வளத்தைப் பார்த்து பிரமித்துப் போய், அத்தனையையும் தாமே ஆளவேண்டும், அத்தனைக்கும் தாமே உரியவர்களாக வேண்டும் என்ற வேட்கை கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் செலுத்தி, ஒட்டு மொத்த இந்தியாவையும் அடிமைப்படுத்தினார்கள் ஆங்கிலேயர்கள். 

இந்த சாதனைக்கு அவர்கள் முக்கியமாகக் கையாண்ட உத்தி – பிரிவினை ஏற்படுத்துதல்! ஆமாம், இந்தியர்களிடையே ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விட்டு, அவரவர் எதிலெல்லாம் பலவீனமானவர் என்பதைத் தெரிந்து கொண்டு அதையெல்லாம் அவர்களுக்கு அளித்து, தம் வசம் இழக்க வைத்து அவர்கள் குளிர் காய்ந்து கொண்டிருந்தார்கள். 

நமக்கெல்லாம் தெரிந்த முக்கியமான பிரிவினை – இந்தியாவிலிருந்து பாகிஸ்தான். ஆனால் இந்த சம்பவம் நடந்த 1947ம் ஆண்டுக்கு முன்னாலேயே பல பிரிவினைகளை உருவாக்கி நம் பாரத கண்டத்தையே உடைத்து சின்னா பின்னமாக்கியவர்கள் ஆங்கிலேயர்கள். 

ஆமாம், பாரதம் ஒரு மகாப் பெரிய கண்டமாகத்தான் இருந்தது. இமயத்திலிருந்து இந்தியப் பெருங்கடல் வரையில் மிகப் பெரிய பரப்பு கொண்டிருந்தது நம் பாரதம். 

முதலில் அவர்கள் பாரதத்திலிருந்து துண்டித்தது, ஆப்கானிஸ்தானத்தை. இதன் பூர்வப் பெயர், உப்கணஸ்தான். மகாபாரத இதிகாசத்தில் இப்போதைய ஆப்கானிஸ்தானைப் பற்றிய குறிப்பு இருக்கிறது. கௌரவர்களின் தாயான காந்தாரியும், அவள் சகோதரன் சகுனியும் வாழ்ந்த பகுதி அது. இப்போதைய கந்தஹார் நகரம் அக்காலத்தில் காந்தாரம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஷாஜஹான் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்வரை அந்த நகரத்துக்கு அந்தப் பெயர்தான். 

1600, டிசம்பர் 31 அன்று ‘ஈஸ்ட் இந்தியா கம்பெனி‘ என்ற பெயரில் இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைத்த ஆங்கிலேயர்கள், விரைவிலேயே மொத்த இந்தியாவையும் தம் அதிகாரக் குடைக்குக் கீழே கொண்டு வந்துவிட்டார்கள். இந்த காலகட்டத்தில் 1876ம் ஆண்டு, பிரிட்டனும், ரஷ்யாவும் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொண்டன. அதன்படி, ஆப்கானிஸ்தான் பாரதத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி நாடாக அறிவிக்கப்பட்டது. 

அடுத்து பிரிக்கப்பட்டது, நேபாளம். 1904ம் ஆண்டு! புராணங்களில் தியோஹிதார் என்றழைக்கப்பட்ட இந்தப் பகுதியின் லும்பினி என்ற இடத்தில்தான் பகவான் புத்தர் அவதரித்தார். அவருக்கும் முன்னால் ஜனக்புரி (இதே பெயரில் இப்போதும் நேபாளத்தில் இந்த இடத்தைப் பார்வையிடலாம்) ராமாயண சீதாதேவி தோன்றினார். இந்த நேபாளம் 1904ம் ஆண்டு பிரிட்டிஷாரால் இந்தியாவிடமிருந்து தனியே பிரிக்கப்பட்டு, ஹிந்து ராஷ்ட்ர நேபாள் என்றழைக்கப்பட்டது. ஹிந்து மதத்தவர் பெரும்பான்மையாக வாழ்ந்த இந்தப் பகுதி மன்னர் அசோகர் மற்றும் சமுத்திரகுப்தர் காலத்தில் மிகப் பிரதான நகரமாக விளங்கி வந்தது. 1951ம் ஆண்டுவாக்கில் நேபாள மன்னராகக் கோலோச்சிய திரிபுவன் சிங், அப்போதைய இந்திய பிரதமரான ஜவஹர்லால் நேருவிடம், நேபாளத்தை இந்தியாவுடன் மீண்டும் இணைத்து விடும்படி கேட்டுக் கொண்டார்; ஆனால் நேரு அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டார்.

மூன்றாவதாக பூடான். 1906ம் ஆண்டில் இப்பகுதியை இந்தியாவிலிருந்து பிரித்த பிரிட்டிஷார் இதற்குத் தனிநாடு அந்தஸ்து கொடுத்தார்கள். ‘பூ உடான்‘ என்ற சமஸ்கிருத சொற்கள் சேர்ந்து பூடான் என்றாகியது அதாவது உயர்ந்த மலைகளைக் கொண்ட நிலம் என்று பொருள். 

இதையும் படியுங்கள்:
ஆசியாவின் பணக்கார கிராமம் எங்க இருக்கு தெரியுமா?
India

திபேத் அவ்வாறு பிரிக்கப்பட்ட நான்காவது இந்தியப் பகுதி. ஆண்டு 1907. த்ரிவிஷ்டம் என்ற சமஸ்கிருத சொல்லே திபேத் என்றானது. அந்த ஆண்டில் சீனாவுடன் மேற்கொண்ட ஓர் ஒப்பந்தப்படி, திபேத் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி சீனாவுக்கும், இன்னொரு பகுதி அப்போதைய புத்த மத குரு லாமாவுக்கு அளிக்கப்பட்டன. சீனாவுடனான திபேத் பகுதி இந்தியாவைச் சேர்ந்தது என்ற கோரிக்கையை பிரதமர் நேரு நிராகரித்தார். ‘நல்லெண்ணத்தின் அடிப்படை‘யில் அந்தப் பகுதி சீனாவுக்கே உரியது என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். 

ஐந்தாவதாக, இலங்கை என்ற இப்போதைய ஸ்ரீலங்கா. 1935ம் ஆண்டில் பிரிட்டிஷார் இந்தத் தீவை இந்தியாவிலிருந்து தனிமைப்படுத்தினார்கள். ஆதிப் பெயரான சிங்களத் தீவு, சிலோன் என்று மாறியது. இலங்கை, தாமிரவர்ணி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. சமஸ்கிருதத்தில் தாமிரம் என்றால் செம்பு; வர்ணி என்றால் வண்ணம். செம்பு வண்ண பூமி என்ற பொருளில் அழைக்கப்பட்டது. (தமிழ்நாட்டில் திருநெல்வேலிக்கு தாமிரபரணி என்றும் ஒரு பெயர் உண்டு – அங்கு ஓடும் நதியை முன்னிருத்தி!) மன்னர் அசோகரின் மகன் மஹேந்திரன் மற்றும் மகள் சங்கமித்ரா இருவரும் இலங்கைப் பகுதிக்கு புத்த மதத்தைப் பரப்புவதற்காக வந்திருக்கிறார்கள்!

இதையும் படியுங்கள்:
விளையாட்டுத் துறையில் ஓஹோன்னு வரணுமா? நம் தமிழகத்தில் இல்லாத வாய்ப்பா?
India

அடுத்து நம் பாரத கண்டத்தை விட்டுப் பிரிந்தது – பர்மா. இப்போது மியான்மர் என்றழைக்கப்படுகிறது. ஆதியில் ஆனந்தவர்தன் என்ற ஹிந்து மன்னரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதி. 1937ம் ஆண்டு பிரிட்டிஷாரின் துண்டாடும் அரசியல் திட்டத்தால் இந்தியாவை விட்டுப் பிரிந்த பகுதி இது. 

கடைசியாக பாகிஸ்தான்!

‘பாரத கண்டே, பரத வர்ஷே’ என்று சமஸ்கிருந்தத்தில் சொல்லப்பட்ட அகண்ட பாரதம், ஆங்கிலேயரின் சூழ்ச்சியால் துண்டாடப்பட்டிருக்கிறது என்பது வேதனையான சரித்திரம்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com