ரபேல் விமான நிறுவன கடிகாரங்களைத் தயாரிக்கிறதா?

ரபேல் விமான நிறுவன கடிகாரங்களைத் தயாரிக்கிறதா?

“ரபேல் வாட்ச்”

இல்லை. அவர்கள் போர் விமானக்களைத்தவிர வேறு எதுவும் தயாரிப்பதில்லை.

பின்   ஏன் கடந்த இரண்டு நாட்களாக “ரபேல் வாட்ச்” என்று செய்திகள் கொட்டுகின்றன?

ரஃபேல் நிறுவனத்துக்கு  இந்திய விமானப்படையின் சில ஆண்டுகளுக்கு முன் ஆர்டர் கிடைத்தை அவர்கள் மிகப்பெருமையான கெளரமான விஷயமாகக் கருதுகிறார்கள். இதைப் பலவிதமாகக் கொண்டாடினார்கள்.  அதனால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  பெல் & ராஸ் நிறுவனம்  அவர்களின் ஒரு புதிய மாடல்  கடிகாரத்தை தயாரித்து தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டார்கள்.

அந்த மாடலின் பெயர்  ரஃபேல்   (BR 03-94 Rafale)  அதன் டயலில் "ரஃபேல்" என்ற பெயரை கொண்டுள்ளது.

இது விமான பைலட்களுக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டது. பெல் & ரோஸ் ரஃபேலின்  குணாதிசயங்களையும் உங்கள் மணிக்கட்டுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளது, இது எல்லா சூழ்நிலைகளிலும் தேர்ச்சி பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் எந்த சந்தர்ப்பத்திலும் பாராட்டுக்குரிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொறியாளர்கள், திறமையான வாட்ச்மேக்கர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழில்முறை விமானிகள் தங்கள் திறமைகளை ஒன்றிணைத்து இந்த சிறந்த "கடிகாரத்தை" வடிவமைத்துள்ளனர் - இது தொழில்முறை பயன்பாட்டிற்கு ஏற்றவாறு நடைமுறை கடிகாரம். கடிகாரத்தின் வடிவமைப்பு, காக்பிட் பேனலில் தெரியும் அதே அடிப்படை வடிவமைப்புக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது என்கிறது கடிகாரத்தின் அறிமுக குறிப்பு.

இந்த கடிகாரங்கள் 500 எண்ணிக்கை  மட்டுமே தயாரிக்கப்பட்டு விசேஷமாக வெளியிட்டது.  நாட்டின் தலைவர்கள், உலகின் சூப்பர் பணக்காரர்களுக்கு மட்டுமே விற்கப்பட்டது. எல்லாக் கடைகளிலும் கிடைக்காது.

இதன் சிறப்புகளை விவரித்து வெளிடப்படிருக்கும் குறிப்பு இந்த வாட்ச்களுடன் வழங்கப்படுகிறது. “அதில்  ரஃபேல் வாட்ச்சின் கேஸ் செராமிக் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டது, இது விண்வெளித் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ராக்கெட்டுகளுக்கான வெப்பக் கவசங்கள் மற்றும் மூக்குகளின் வடிவமைப்பில் பீங்கான் பயன்படுத்தப்படுகிறது மற்றும் வல்லுநர்களின் கூற்றுப்படி வைரத்தைப் போலவே கடினமானதாகக் கருதப்படுகிறது. மிகவும் கடினமான மற்றும் மாறாத நிறத்தைக் கொண்டுள்ளது, பீங்கான் எஃகு, ஹைபோஅலர்கெனியை விட இலகுவானது மற்றும் வெப்பக் கட்டுப்பாட்டு பண்புகளைக் கொண்டுள்ளது, தீவிர நிலைமைகளைத் தாங்கும் திறன் கொண்டது

ரஃபேலின் சிறப்பியல்பு நிறம் டயலை அலங்கரிக்கிறது: ஒரே வண்ணமுடைய உருமறைப்பு சாம்பல். பிளாக் செராமிக் கேஸ் என்பது விமான காக்பிட்களில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் பேனல்களின் எதிர்-பிரதிபலிப்பு நிறங்களைக் குறிக்கிறது. டயல் சபையர் கண்ணாடி மற்றும் எதிர்ப்பு பிரதிபலிப்பு பூச்சு மூலம் பாதுகாக்கப்படுகிறது. கால வரைபடம் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் கைகள் கூடுதல் தெளிவுக்கு ஆரஞ்சு நிற முனைகளைக் கொண்டுள்ளன. கடிகாரத்தின் வடிவமைப்பு பற்றி அனைத்தும் ரஃபேல் ஜெட் விமானத்திற்கு அருகில் உள்ளது.” என்று பெருமை பேசுகிறது.

இந்தியாவில் இதன் ஆர்டர்களைப்பெற  “ எதோஸ் வாட்ச் பொட்டிக்” என்ற கைக்கடிகாரங்கள் விற்கும் நிறுவனம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

 5 ஆண்டுகளுக்கு முன் இந்த கைக்கடிகாரத்தின் விலை 3.5 லட்சம் ரூபாய்.   உயந்து கொண்டிருக்கும் அமெரிக்க  டாலர் மதிப்பில் இன்றைய விலை 5 லட்சமாகயிருக்கும்.

தமிழ் நாட்டில் இதை அணிந்துகொண்டிருப்பவர் பா.ஜ.க மாநில  தலைவர் அண்ணாமலை. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com