இது மொழி ஆதிக்கத்தின் அடையாளாம்.

இது  மொழி ஆதிக்கத்தின்  அடையாளாம்.
Published on

ண்மையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு ஒன்றிய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் பல்கலைகளில் “இந்தி மொழியே கட்டாய பயிற்று மொழியாக இருக்க வேண்டும்” என்ற அறிவுறுத்தலை குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளது. அதாவது, “ஆங்கிலம் இருக்கும் இடத்தில் இனிமேல் இந்தி இருக்க வேண்டும், உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கான போட்டித்தேர்வுகள் அத்தனையிலும் ஆங்கிலத்திற்கு பதில் இந்தியே பிரதானமாக இருக்க வேண்டும்” என்கிறது குழுவின் அறிக்கை.

இது மறைமுகமாக ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ள பிறமொழி பேசும் மாநிலங்களில் இந்தியை திணிக்கும் முயற்சியின் உச்சகட்டம். அதிகாரிகள் இந்தியை பயன்படுத்தாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அமித்ஷா தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது. இது இந்தி மொழி ஆதிக்கத்தின் அடையாளாம்.

“இது ஒரு குழுவின் பரிந்துரைகள் மட்டுமே. இன்னும் சட்டமாக்கவில்லை” என்று சொல்லப்பட்டாலும் குழுவின் பரிந்துரைகளின் தன்மை அதை செயல்படுத்த காட்டும் வேகம் எல்லாம் “இது விவாதமில்லாமல் சட்டமாகும் வாய்ப்பு” என்பதை உணர்த்துகிறது.

இந்தியாவிலேயே முதன்முறையாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் எம்.பி.பி.எஸ்., பாடங்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அந்த புத்தகங்களை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுளார்.

அதைத் தொடர்ந்து “இன்ஜினீயரிங், தகவல் தொழில்நுட்ப பாடங்களையும் இந்தி மொழியாக்கம் செய்யும் பணிகள் தொடங்கப்பட உள்ளன” என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழக மக்கள், மொழித்திணிப்பை எதிர்ப்பவர்கள். 1965ல் இந்தி மொழியை திணிக்க முயன்றபோது தமிழகம் மொழிப்போர் களமாக மாறியதும், அதன் விளைவாக நிகழ்ந்த அரசியல் மாற்றங்களும் வரலாறு.

அதனால் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் “இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம்” என்று ஒன்றிய அரசுக்கு பகிரங்கமாக எச்சரித்து இருக்கிறார்

ஆக்கப்பூர்வமாகச், செய்யவேண்டிய வளர்ச்சிப்பணிகள் ஆயிரம் காதிருக்க, இந்த மொழி திணிப்பை பா.ஜ.க. அரசு கையிலெடுத்திருப்பது அவர்களுக்கே ஆபத்தாக முடியும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com