700 வியாழக்கிழமை முகாம்கள்; தொடர் இலவச மருத்துவ ஆலோசனைகள்... யார் இந்த டாக்டர்? சந்திப்போமா...

Dr. AV Srinivasan
Dr. AV SrinivasanImg Credit: Madras Medical College Alumni and Sun TV
Published on
Kalki Strip

சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளாக சென்னையின் ஒரு பிரபல நரம்பியல் நிபுணராக விளங்குபவர் டாக்டர் ஏ.வி.சீனிவாசன் ஆவார். இவர் தனது மருத்துவ மற்றும் சமூக சேவையில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உணர்வைக் கொண்டுள்ளார்.

அன்னாரை சமீபத்தில் சென்னையில் அவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியுள்ள, ’நினைவாற்றல் நிரந்தரமா?’ என்னும் நூல் வெளியீட்டு விழாவில் சந்திக்கும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். இருமொழிப் புத்தகங்களும் விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் இலவசமாக கொடுக்கப்பட்டன. இந்நூல் 130 பக்கங்களில் அனைவருக்கும் பயனுள்ள பலத் தகவல்களைக் கொண்டுள்ளது.

விழா முடிந்ததும் அவர் என்னுடன் தன் தொழில்வாழ்க்கைப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதோ அவை உங்களுக்காக:

2010 ஆம் ஆண்டு இவர் தொடங்கிய மூளை அறக்கட்டளை இதுவரை 700 வியாழக்கிழமை முகாம்களில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள், ஒரு மாதத்திற்கான மருந்துகள், உணவுகள் அனைத்தையும் இலவசமாக தொடர்ந்து அளித்து வருகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் தனது இராஜா அண்ணாமலைப்புரம் கிளினிக்கில் இது தொடரும் என்கிறார் மருத்துவர் ஏ.வி.சீனிவாசன்.

இவர் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் தனது MBBS மற்றும் MD பொது மருத்துவப் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் துறையில் முனைவர் பட்டம் (Ph.D.) பெற்ற முதல் நபரும் இவரே ஆவார்.

மேலும், இவர் எலக்ட்ரோ பிசியாலஜி, வலிப்பு, இயக்கக் கோளாறுகள் மற்றும் தலைவலி போன்ற நரம்பியல் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர். அமெரிக்க நரம்பியல் அகாடமியின் (American Academy of Neurology) விருதினைப் பெற்ற முதல் இந்திய மருத்துவர் என்னும் பெருமைக்கு சொந்தக்காரர். நரம்பியல் துறையில் பல சர்வதேச பட்டறைகளை நடத்தி, கற்பித்தல் மற்றும் மருத்துவ சேவைகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இந்திய நரம்பியல் அகாடமி மற்றும் அமெரிக்க நரம்பியல் அகாடமி போன்ற புகழ்பெற்ற அமைப்புகளுடன் தொடர்புடையவர். அமெரிக்க நண்பர்கள் (Friends of US), மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம், மற்றும் The Hindu போன்ற ஊடகங்கள் இவரது பணிகளை பாராட்டிப் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரியான இவர், தன்னுடைய 75ஆவது வயதிலும் ஐஐடில் (மெட்ராஸ்) உயிரி – தொழில்நுட்பப் பிரிவில் தற்போது மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வருவது பாராட்டுக்குரியது.

2001ல் ஃபிலடெல்பியாவில் நடந்த அமெரிக்க நரம்பியல் அகாடமியின் வருடாந்திரக் கூட்டத்தில் AINA விருதைப் பெற்ற முதல் இந்தியர் இவரே ஆவார். மின் உடலியல், கால்-கை வலிப்பு, இயக்கக் கோளாறுகள் மற்றும் தலைவலி குறித்த சர்வதேச பட்டறைகள் பலவற்றை நடத்தியுள்ளார்.

American Academy of Neurology, Indian Academy of Neurology மற்றும் லண்டனில் உள்ள ராயல் மருத்துவக் கல்லூரி போன்றவற்றின் உறுப்பினராக உள்ள இவர், பல தேசிய மாநாடுகளில் 60க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், சர்வதேச மாநாடுகளில் 25 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார்.

அவரது படைப்புகளுக்காக சிறந்த நரம்பியல் உளவியல் விருது (1990), AINA விருது அமெரிக்காவில் உள்ள இந்திய நரம்பியல் நிபுணர்கள் சங்கம் (2001), டீன் பாராட்டு விருது (அக்டோபர் 2001), ஷேக்ஸ்பியர் மில்லினியம் கிளப் விருது (2014), SYMA SEVA விருது (2014), தமிழ்நாடு ரத்தின விருது (2015), டாக்டர் முரளிதர் ஆராதனை (APNSA 2016), போன்ற விருதுகளை பெற்றுள்ள இவர், தலைவர், ஆராய்ச்சி வாரியம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், மற்றும் உறுப்பினர் செட்டிநாடு ஆராய்ச்சி அகாடமி ஆகிய பொறுப்புகளிலும் உள்ளார்.

இவை அனைத்தும் தன் தொழில் நிபுணத்துவத்துக்கு பெருமை சேர்ப்பதாக அவர் கூறுகிறார்.

அவரின் மருத்துவ சமூகப் பணி மேலும் சிறக்க நம் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவரிடமிருந்து விடைப்பெற்றேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com