பை நௌ பே லேட்டர் செயலிகளை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!

பை நௌ பே லேட்டர் செயலிகளை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய அம்சங்கள்!
Updated on

முன்பெல்லாம் நாம் பொருட்களை வாங்குவதற்கு முன்னர், பணத்தைச் சேமித்து வாங்குவோம். இப்போது, இளைஞர்களிடம் கடன் அட்டை மூலமும், பே லேட்டர் செயலிகள் மூலமும் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. இந்த பை நௌ,பே லேட்டர் (Buy now, pay later) செயலிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

பை நௌ, பே லேட்டர் செயலிகள் என்றால் என்ன ?

பை நௌ, பே லேட்டர், அதாவது இப்போது வாங்கு, பின்னால் திருப்பிக் கொடு, செயலிகள் கிட்டத்தட்ட தனிநபர் கடன் போன்றவையே.

ஒரு பொருள் வாங்குவதற்கு போதுமான பணம் இல்லாத பட்சத்தில், கடன் அட்டைக்கு பதிலாக, தனி நபர் கடனுக்கு பதிலாக, இத்தகைய இப்போது வாங்கு, பின்னர் திருப்பிக் கொடு (Buy now pay later) போன்ற செயலிகள் வந்துள்ளன. இவை, கையில் காசு இல்லாத போதும், பொருட்களை உடனே வாங்க உதவும். ஆனால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் பணத்தைத் திரும்ப செலுத்த வேண்டும். இல்லையென்றால், தினந்தோறும் அபராதம் , வட்டி என்று பணம் வீணாகும்.

இப்போது வாங்கு, பின்னர் திருப்பிக் கொடு செயலிகளில் கடன் வாங்கும் போது, அது தனிநபர் கடன் என்றே சிபில் மதிப்பீட்டில் (CIBIL Score) குறிக்கப்படும்.

பை நௌ பே லேட்டர் செயலிகளில் பொருட்களை வாங்கலாமா ?

ப்போது வாங்கு, பின்னர் திருப்பிக் கொடு (BNPL) செயலிகளின் மூலம் பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஒருவரால் பணம் கொடுத்து வாங்க முடியாத பொருளை (not affordable), கடன் வாங்கி வாங்குவதற்கு இந்த செயலிகள் உதவுகின்றன. பரிசீலனைக் கட்டணங்கள் மூலம் கடன் சுமை அதிகமாகிறது. அந்த கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தாவிட்டால், வட்டி மூலம், கடன் சுமை இன்னும் அதிகமாகும்.

ங்களுக்கு இந்த செயலிகளைப் பயன்படுத்த வேண்டுமென்றால், பின்வரும் அடிப்படையில் தெர்ந்தெடுங்கள்.

குறைந்த பணம் மட்டுமே கடனாக வழங்கும் செயலி எது ?

இவை பெரிய கடன் சுமையில் நீங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும்.

கடனைத் திரும்பச் செலுத்த அதிக காலவரையறை உள்ள செயலி எது?

30 நாட்கள் உள்ள செயலிகள், கடனைத் திருப்பித் தர அதிக அவகாசம் தருகின்றன. அதைத் தாண்டிய பின்னர் வட்டி செலுத்த வேண்டும்.

உங்களிடமிருந்து அதிக விபரங்கள் கோராத செயலி எது ?

இதன் மூலம், உங்களது தனிநபர் தகவல்கள் அதிக பாதுகாப்பாக இருக்கும்.

வட்டி விகிதம் மற்றும் இதர பரிசீலனை கட்டணங்கள் (processing charges) குறைவாக உள்ள செயலி எது ? 

இதன் மூலம், கடன் சுமை குறைவாக இருக்கும்.

இவ்வாறு உங்களைப் பெரிய கடன் சுமைக்குள் தள்ளாத செயலியைத் தேர்ந்தெடுங்கள். சீக்கிரமாக கடனை அடைத்து கடனில்லாத மனிதனாக உருவாகுங்கள்.

பை நௌ பே லேட்டர் செயலிகளைத் தவிர்ப்பது எப்படி ?

பை நௌ பே லேட்டர் செயலிகளுக்குப் பதிலாக பின்வரும் விஷயங்களைச் செய்யுங்கள்.

எந்த ஒரு பொருளுக்கும் பணத்தை சேமித்து வாங்குங்கள்.

எந்த ஒரு குறிக்கோளுக்கும் பணத்தை தொடர் வைப்பு நிதியில் (Recurring Deposit) முதலீடு செய்து, பெருக்கி பின்னர் வாங்குங்கள்.

பணத்தைச் சேமித்து, பொருளுக்காக காத்திருப்பதைப் பழகிக் கொள்ளுங்கள். காத்திருப்பதிலும் ஒரு சுகம் உள்ளது.

எந்த ஒரு பொருளையும் சொந்தப் பணத்தைக் கொண்டு மட்டுமே வாங்குவேன் என்று உறுதியாக இருங்கள். பொருட்களை விற்றாவது பணத்தை திரட்டி வாங்குங்கள். கடன் வாங்குவதைத் தவிருங்கள்.

கடன்களை எந்த வடிவத்திலும் தவிர்ப்போம். கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.

logo
Kalki Online
kalkionline.com