

நாளுக்கு நாள் தங்கம் விலை அதிகரிப்பதால் நகை என்பதை நினைத்துப் பார்க்க கூட முடியாத நிலைக்கு சாமானிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதில் 2035 ஆம் ஆண்டு தங்கம் விலை என்னவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று நகை. முந்தைய காலம் முதலே தங்கத்திற்கு மதிப்பு அதிகம். இந்தியாவில் மதுக்கடைகளுக்கு அடுத்தப்படியாக நகைகடைகளில் தான் கூட்டம் கூடுகிறது என்று சொல்வோரும் உண்டு. அப்படி தங்கத்தின் மீதான ஈர்ப்பு யாரைத்தான் விட்டு வைத்தது.
மண்ணிற்கு அடியில் இருந்து கிடைக்கும் இந்த பொக்கிஷத்தின் மதிப்பு குறைந்த பாடே இல்லை. 'விலை அதிகரிப்பதற்குள் எப்படியாவது தங்கம் வாங்கிவிடலாம்' என்று மக்கள் நினைக்கும் நேரத்தில் மேலும் கூடிவிடுகிறது தங்கத்தின் விலை. இதனால் நகை வாங்கமுடியாமல் பலரும் திணறி வருகின்றனர்.
அன்றைய காலத்தில் வெறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு பல சவரன் வாங்கிய பெண்களுக்கோ தற்போது ஜாக்பாட் தான். ஏனென்றால் அன்றைய காலத்து நகைகளை இன்றைக்கு விற்றால் லட்சக்கணக்கில் லாபம் பெறலாம். அந்த அளவிற்கு நகையின் விலை உச்சம் தொட்டு வருகிறது,
2025ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை நினைத்துக்கூட பார்க்கமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் எவ்வளவு இருந்த தங்கம் விலை தற்போது ஆண்டின் முடிவில் எவ்வளவு வரை உயர்ந்துள்ளது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.. இதை பார்க்கும் போது ஆரம்பத்திலேயே நகை வாங்கி இருக்கலாம் என்று தான் பலருக்கும் தோன்றும். இனி சாமானிய மக்களால் நகை வாங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
1920ஆம் ஆண்டு - ரூ.21
1980ஆம் ஆண்டு - ரூ.1,000
2009ஆம் ஆண்டு - ரூ.10,000
2016ஆம் ஆண்டு - ரூ.20,000
2020ஆம் ஆண்டு - ரூ.30,000
2022ஆம் ஆண்டு - ரூ.40,000
2024ஆம் ஆண்டு - ரூ.50,000
ஜனவரி 22, 2025 - ரூ.60,000
ஏப்ரல் 12, 2025 - ரூ.70,000
செப்டம்பர் 6, 2025 - ரூ.80,000
அக்டோபர் 8, 2025 - ரூ.90,000
டிசம்பர் 15, 2025 - ரூ.1,00,120
மேலே கொடுக்கப்பட்ட தகவலின் படி, கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே தங்கம் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது தெரியவருகிறது. இனி வரும் 2026ஆம் ஆண்டிலும் தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்கும் என்று சொல்லப்படுகிறது!