"கூகுள் சி.இ.ஓ நீக்கப்படுவார் அல்லது பதவி விலகுவார்"- சமீர் அரோரா! காரணம் என்னவாக இருக்கும்?

Google CEO Sundar Pichai
Google CEO Sundar Pichai
Published on

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையை விரைவில் பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவரே ராஜினாமா செய்வார் என, ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா X தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்னவாக இருக்கும்? என்பது குறித்து விவரிக்கிறது இந்த பதிவு.

ஜெமினி ஏ.ஐ:

ஜெமினி ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு, சாட்பாட்கள் செயல்படுவதற்கு அடிப்படையான தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. இந்த சாட்பாட்கள் பயனாளிகள்  எழுத்து வடிவில் கொடுக்கும் உள்ளீடுகளைப் பெற்றுக்கொண்டு, பின் அதற்கு ஏற்ற கட்டுரைகளை வழங்கும். அதுபோக வழக்கமான ஈமெயில்களை எழுதுவது, பாடல்கள் எழுதுவது போன்ற பயனாளிகளின் விரும்பத்திற்கு ஏற்றவாறு எழுத்து வடிவிலோ, புகைப்படம் அல்லது வீடியோ வடிவிலோ அவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வளிக்கும். மேலும் கட்டுரைகளை சுருக்கவும், சாப்ட்வேர் டெவலப்பர்கள் கோடிங் எழுதவும்  உதவவும். ஜெமினி பல தேவைகளுக்கு பயன்படக்கூடிய ஒரு செயலியைப் போல செயல்படும் என்றும் மேலும் இதனை API இணைப்பு மூலம் பயன்படுத்தலாம் என்றும் கூகுள் அறிவித்திருந்தது. மெமரி மற்றும் திட்டமிடல் தொடர்பான எதிர்கால கண்டுபிடிப்புகளுக்கும் கூட துணைபுரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் குறிப்பிட்டிருந்தது.

 சேட் ஜிபிடியா அல்லது ஜெமினியா?

மைக்ரோசாப்ட்  நிறுவனம் முன்னதாகவே OpenAI இன் சேட் ஜிபிடியை உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தியது.  அதன் மூலம் ஏராளமான நிருவனங்களுக்கு வருமானத்தைத் தரத் தொடங்கியுள்ளது. வேறு சில நிறுவனங்களும்கூட  OpenAI நிறுவனத்தின் AI மாடலை அதாவது சேட் ஜிபிடியை  பயன்படுத்த முன்வந்தனர்.  ஆனால் கூகுள் நிறுவனம் தன்னுடைய ஜெமினி மாடலுக்கு மார்க்கெட்டில் அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக எண்ணி, இந்த ஆண்டு ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தில் முதலீடுகளை தீவிரப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் ஆதரவுடன் OpenAI கடந்த ஆண்டு ChatGPT ஐ அறிமுகப்படுத்தியது, இதற்கு போட்டியாக கூகுள் நிறுவனமும் அதேபோன்ற மாடல் ஒன்றை உருவாக்க களமிறங்கியது. ஆனால் எதிர்பாரா விதமாக ஜெமினி திட்டத்தில் மிகப்பெரியத் தோல்வியை கூகுள் நிறுவனம்  தழுவியது. கூகுள் AI துறையின் இந்த தோல்வியானது  உலகளவில் முன்னனி தொழிற்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் கூகுள் நிறுவனம் பொதுமக்களின் கிண்டல்கள் மற்றும் கேலிகளுக்கு உள்ளாக்கியது. மேலும் இதனால் சமூக வலைதளங்களில் பல சர்ச்சைகள் கிளம்பின.

இதையும் படியுங்கள்:
செயற்கை நுண்ணறிவின் எதிர்காலமும், சமூகத் தாக்கங்களும்! 
Google CEO Sundar Pichai
Google's Gemini AI
Google's Gemini AI

சர்ச்சைகளுக்குள்ளான ஜெமினி?

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான ஜெமினி முதலாவதாக ‘பார்ட்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டது. பல வகையான மாற்றங்களின் அடிப்படையில் தற்போது ஜெமினி என மாறியுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக நன்றாக இயங்கிவந்த ஜெமினி சமீப காலமாக தவறான படங்களையும், தகவல்களையும் பயனாளர்களுக்கு வழங்கியது. இதனால் இது செய்திகளில் கூட இடம்பிடித்தது.

முன்னர், ஜெமினியின் AI இரண்டாம் உலகப்போர் வீரர்கள் மற்றும் அமெரிக்காவின் நிறுவனர்களின் தவறான படங்களை உருவாக்கியது. அதுமட்டுமின்றி பிரதமர் மோடி குறித்தும் தவறான தகவல்களை வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கியது. பின்பு  கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த நபர் பணிநீக்கம் செய்யப்பட்டு, அதோடு  AI படத்தை உருவாக்கும் அம்சமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட பின்னரே மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

Samir Arora
Samir Arora

தோல்வியைத் தழுவிய கூகுளின் ஜெமினி:

சுந்தர் பிச்சை ராஜினாமா குறித்து பல செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.  கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தளமான 'ஜெமினி ஏஐ' (பார்ட்)யின் தோல்வியே இதற்கு காரணம் என்று தனது சமூகவலைத்தளப்  பக்கத்தில் தெரிவித்துள்ள சமீர் அரோரா, சுந்தர் பிச்சையின் பதவிக்காலம் முடிவடையப்போவதாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.

“அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவார் என்று நினைக்கிறேன். ஜெமினி என்னும் செயற்கை நுண்ணறிவு தளத்தை வெற்றியடையச் செய்வதில் அவர் முற்றிலும் தோல்வியடைந்ததால், வேறு யாராவது அவரது பதவியில் பொறுப்பேற்பார்,” என்றும் அரோரா தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.

கூகுளின் புதிய AI கருவியான ஜெமினி தோல்வியடைந்ததால் தான் இந்த சர்ச்சை தொடங்கியுள்ளது. இந்த ஜெமினி சார்ந்த AI துறையை வழிநடத்தியது கூகுளின் தலைமை நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com