
நான் முதன் முதலாக ஜெ.சி. அவர்களின் 'அவன் வருவான்' சிறுகதையை படித்து வியந்தது நினைவுக்கு வருகிறது.
துணைப் பாட நூல் தொகுப்பில்தான் அந்தக்கதை எனக்கு அறிமுகமானது.
ஒரு கூர்க்காவைப் பற்றிய கதை.
ஜீவகீதம், ஞானக்குயில் போன்ற தொடர்களைக் கல்கி வெளியிட்டது
வித்தியாசமான களங்களில் எழுதினார். 'திருச்சிற்றம்பலம்' 'ஆலவாய் அழகன்' போன்ற அற்புதமான வரலாற்று நாவல்களை எழுதிய ஜெகசிற்பியன் என்கிற 'பாலையன்' பிறப்பால் ஒரு கிறிஸ்துவர் என்பதை எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்?
அதிகம் விளம்பரம் இல்லாமல் ஓர் ஆழமான படைப்பிலக்கிய வாதியின் நூற்றாண்டு அமைதியாகக் கடந்துபோய்விட்டது.
'விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கையே நிரந்தரம் ஆகாத' போது எளிமைக்கு எப்படி வெளிச்சம் கிடைக்கும்?
ஆயிரம் அமைதியான மலர்களுக்கிடையே ஜெகசிற்பியனும் ஒருவர்.
அவருடைய நினைவுக்கு என் அஞ்சலி மலர்கள்.
இன்று நாவலாசிரியர் ஜெகசிற்பியன் அவர்களின் நூற்றாண்டையொட்டி 1955ல் கல்கியில் வெளியான இச்சிறுகதை வெளியிடப்படுகிறது....