கலைஞர் கருணாநிதி குடும்பத்தோடு ஷாப்பிங் போயிருக்கிறீர்களா? | கலைஞர் 100

கலைஞரும் கல்கியும்
கலைஞர் கருணாநிதி குடும்பத்தோடு ஷாப்பிங் போயிருக்கிறீர்களா? | கலைஞர் 100

கலைஞரின் நூற்றாண்டுவிழாவினை ஒட்டி கல்கி இதழின் 80 ஆண்டு கால களஞ்சியத்தில் இருந்து நமது நிருபர் எஸ். சந்திர மௌலி மூழ்கி எடுத்த முத்துக்களின் தொகுப்பு.

கலைஞரது 75வது பிறந்த நாளை ஒட்டி வெளியான 07.06.1998 மற்றும் 14.06.1998 ஆகிய இரு கல்கி இதழ்களில் “கலைஞர் 75” என்ற தலைப்பில் அவரது முற்றிலும் மாறுபட்ட பேட்டி இரண்டு பகுதிகளாக வெளியானது.

அந்தப் பேட்டியின் முதல் பகுதி நேற்று வெளியானது. இதோ அதன் தொடர்ச்சி:

கல்கி : கல்லூரியில் படிக்க முடியவில்லையே என்கிற ஏக்கம் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?

கலைஞர் : அரசியல் துறையில் நான் நம்பிய நண்பர்களால் ஏற்படுகின்ற ஏமாற்றங்களைச் சந்திக்கும்பொழுது, 'ஐயோ கல்லூரியில் படித்திருந்தால் அரசியலுக்கு வத்திருக்க மாட்டோமே' என்று நினைத்திருக்கிறேன். கல்லூரியில் படித்திருந்தால் ஏதாவதொரு வேலைக்கல்லவா போயிருப்பேன்!

கல்கி : அண்ணாவிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம்?

கலைஞர் : அவரது எளிமை. அவர், தாம் போட்டுக் கொண்டிருக்கிற சொக்காயைப் பற்றிக் கூட கவலைப்பட மாட்டார். அதில் எத்தனை பொத்தான்கள் இருக்கிறதென்பது கூட அவருக்குத் தெரியாது. பல நேரங்களில் பொத்தான்கள் ஒன்றுக்கொன்று மாறுதலாகப் போடப்பட்டிருக்கும். சில நேரங்களில் நாங்கள் இதைப் பொதுக் கூட்ட மேடைகளில் பார்த்து விட்டுச் சொன்னாலும் கவலைப்பட மாட்டார். கட்டாயப்படுத்தித்தான் அவரை தலை வாரிக் கொள்ளச் செய்வோம். ஷேவ் செய்து கொள்வது பற்றியும் கவலைப்பட மாட்டார். அவர் முதல்வரான பிறகுதான் தொடர்ந்து ஷேவ் செய்து கொண்டார். அதோ... ஹாரி மில்லர் எடுத்த அண்ணாலின் படத்தைப் பாருங்களேன்... (கலைஞரது அறையில் உள்ள ஷேவ் செய்யப்படாத. அண்ணா படத்தைக் காட்டுகிறார்)

கல்கி : உங்கள் சமகாலத்திய இயக்கத் தோழர்களில் யாரைக் கண்டு பெருமைப்படுகிறீர்கள்? யாரைக் கண்டு வருத்தப்படுகிறீர்கள்?

கலைஞர் : பேராசிரியர் அன்பழகனைக் கண்டு பெருமைப்படுகிறேன். நாவலர் நெடுஞ்செழியனைக் கண்டு வருத்தப்படுகிறேன். ஏனெனில் நாவலர் இலக்கியம் படித்தவர். சங்க இலக்கியங்களையெல்லாம் ஆராய்ந்தவர். நல்ல பேச்சாளர், அண்ணாவே அவரைப் பார்த்து, "தம்பி வா! தலைமை ஏற்க வா! ஆணை கேட்டு நடக்கக் காத்திருக்கிறோம் வா!என்று அழைத்தார். அப்படிப்பட்ட நாவலர் இந்த நிலைமைக்குப் போய் விட்டாரே என்ற வருத்தம் எனக்கு.

கல்கி : பேராசிரியரைக் கண்டு நீங்கள் பெருமைப்படுவதற்கான விஷயம் என்ன?

கலைஞர் : அண்ணா சென்னைக்கு வந்தால் பெரும்பாலும் பேராசிரியர் வீட்டில்தான் தங்குவார். நான், நாவலர், சம்பத் எல்லோரும் அங்குதான் அண்ணாவிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டாம். கட்சிக்கு எத்தனையோ சோதனைகள் வந்தபோதும் கட்சி, கொள்கை என்பதில் சிறிதளவும் மாறுதல் இல்லாமல் இருப்பவர். எம்.ஜி.ஆர். காலத்தில் அவரை அழைத்தார்கள். அவர் விரும்பியிருந்தால் அவர் அங்கு சென்று பதவி வகித்திருக்கலாம். ஆனாலும் இம்மியும் மாறாமல் இருந்தார். என்னோடு கூட அவருக்குச் சில அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் அவர் எனக்காக அல்லாமல் கட்சிக்காக என்னோடு இருக்கிறார். அதனால் தான் அவரை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

கல்கி : எப்போதாவது உங்கள் குடும்பத்தாரோடு ஷாப்பிங் போயிருக்கிறீர்களா?

கலைஞர் : இப்படியொரு விஷயம் நடக்கவேயில்லை! (பலமாகச் சிரிக்கிறார்?

கல்கி: இப்போது சாத்தியமில்லைதான். ஆனாலும் உங்களுக்குக் கல்யாணமான புதிதில் கூடவா அப்படிப் போனதில்லை?

கலைஞர் : அப்போதும் நாள் போனது கிடையாது.

கல்கி : உங்கள் குடும்பத்தாருக்குப் பிடித்தமான உடைகளை நீங்களாகவே கடைக்குப் போய் வாங்கிக் கொடுத்திருக்கிறீர்களா?

கலைஞர்: டெல்லி போன்ற வெளியூர்களுக்குச் செல்லும் போதும் வெளிநாடுகளுக்குச் செல்கிற போதும், குடும்பத்தாருக்குப் பிடித்தமான உடைகள் பற்றி அவர்களிடமே கேட்டறிந்து, அதுவும் நான் போய் வாங்குவதில்லை; வேறு யாரையாவது போய் வாங்கி வரச் செய்து கொடுப்பதுண்டு.

கல்கி : உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் வீட்டுப் பாடம் சொல்லிக் கொடுத்ததுண்டா?

கலைஞர் : முரசொலி மாறன் குழந்தையாக இருந்தபோது சொல்லிக் கொடுத்திருக்கிறேன். வேடிக்கை என்னவென்றால், என்னை எட்டாவதில் கொண்டு போய்ச் சேர்ப்பதாகச் சொல்லி ஐந்தாவதில் கூட சேர்ப்பதற்குச் சிரமம் ஏற்பட்டது. மாறனைத் திருக்குவளையில் மூன்றாவது வரை படிக்க வைத்து, திருவாரூரில் கொண்டு போய் ஐந்தாவதில் சேர்த்து விட்டேன். அந்த அளவுக்கு நான் நன்றாகச் சொல்லிக் கொடுத்தேன் மாறனுக்கு.

கல்கி : நீங்கள் ஒரு கெட்டிக்கார ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள்.

கலைஞர் : ஆம்; ஆனால் நான் கெட்டிக்கார மாணவனாக இல்லை (சிரிப்பு)

கல்கி : ஸ்டாலின், அழகிரி போன்றோருக்கெல்லாம் நீங்கள் சொல்லித் தந்ததில்வையா?

கலைஞர் : இல்லை. முரசொலி சொர்ணத்துக்கும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

கல்கி : திரைப்படத் துறையில் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர் யார்?

கலைஞர் : திரைப்படத்துறையில் நான் நுழைவதற்குக் காரணமாக இருந்தவர். காலஞ்சென்ற தபேலா முத்துக்கிருஷ்ணன். திருச்சி வானொலி நிலையத்தில் வேலை பார்த்தார்: சக்தி நாடக சபாவில் இருந்தவர். அடுத்தவர் கவி காமு. ஷெரீப். அவர்தாம் எனது மந்திரிகுமாரி நாடகத்தைப் பார்த்து விட்டு, அதுபற்றி டிஆர். சுந்தரத்திடம் சொல்வி, அதைப் படமாக்கச் செய்தவர். அந்தத் துறையிலுள்ள நீக்குப் போக்குகளை நான் அறிகிற அளவுக்கு வாய்ப்புத் தந்தவர் டைரக்டர் ஏ.எஸ். ஏ. சாமி

கல்கி: எந்தப் படத்தின் வசனத்தை எழுத நீங்கள் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டீர்கள்?

கலைஞர் : எந்தப் படத்துக்குமே நான் நீண்ட நான் எடுத்துக் கொண்டதில்லை. சில படங்களுக்கு ஒரு வார காலத்திலும் எழுதியிருக்கிறேன். இடையில் வேறு வேலைகள் இருக்கிறபோது, ஒரு மாத காலம் எடுத்துக் கொண்டும் எழுதியிருக்கிறேன். முதலில் டைரக்டர்களோடு உட்கார்த்து பேசி, திரைக்கதையை முடிவு செய்து கொண்டு விடுவதால் வசனத்தை மளமள வென்று எழுதி விடுவேன்

கல்கி : “மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" என்பதால் இந்தக் கேள்வி. அரசியல்வாதி ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த அம்சம் என்ன?

இந்தக் கேள்விக்கு கலைஞர் சொன்ன பதிலால் அவரது அறையே வெடிச்சிரிப்பில் அதிர்ந்தது. எவ்விதமான உனர்ச்சிகளையும் சுலபத்தில் வெளிக்காட்டிவிடாத கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் கூடத் தம்மை மறந்து சிரித்துவிட்டார்.

கலைஞர் சொன்ன அந்த பதில்தான் என்ன?

நாளை பார்க்கலாம்.

கல்கி 07.06.1998 இதழிலிருந்து

தொகுப்பு: எஸ். சந்திர மௌலி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com