“நாலு பவுன் நகை, ரொக்கம் பத்து லட்சம் இதையெல்லாம் வீட்டுல வச்சுட்டு வந்துட்டியே பயமில்லையா?”
“பக்கத்து வீட்டு ரெய்டு நடக்கறதால பயமே இல்ல...”
*****************************************
“நடந்து போயிட்டிருக்கும்போது பொண்டாட்டிகிட்டேயிருந்து போன் வந்தா நின்னு பேசு!”
“ஏன்?”
“நம்மளப் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு நடக்கிறவன்னு யாரும் சொல்லக் கூடாது பாரு... அதுக்குத்தான்!”
*****************************************
“வோட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீங்களே...?”
“நாங்க சிறப்பு பார்வையாளர்கள்.”
*****************************************
“உன் வீட்டுல கொரோனா கட்டுப்பாடு தளர்வு நடைமுறைக்கு வந்தாச்சா?”
“வந்தாச்சு! ஆன்லைன் மூலமா சண்டை போட்டுக் கொண்டிருந்த என் மாமியாரும் நானும் இப்போ நேரில் சண்டை போடுறோம்!”
*****************************************
“மாமியாரும் மருமகளும் கறுப்பு கோட் மாட்டிக்கிட்டு ஏன் சண்டை போடறாங்க?”
“இரண்டு பேருமே வக்கீல்டி!”
*****************************************
“முதல் குழந்தை பேரு கோவேக்சின். இரண்டாவது கோவிஷீல்டு.”
“பலே...”
“மூணாவது குழந்தை பெயர் டோலோ.”
*****************************************
“வாழ்வில் ஒருமுறையாவது போரை பார்த்துடணும் மந்திரி?”
“அதுக்கு மாறு வேடத்தில்தான் போர்களம் போகனும் அரசே!”