Vicky Kumar – Director Digibionic Interview
Vicky Kumar – Director Digibionic Interview

Hearing-Aid எவ்வாறு இயங்குகிறது? அதை எப்படி பராமரிப்பது?

An Interview with Vicky Kumar – Director Digibionic Lifestyle India Pvt Ltd
Published on

கேட்கும் திறன் என்பது நம் வாழ்வின் இன்றியமையாத வரம். சிலருக்குப் பிறப்பிலேயே கேட்கும் திறன் இல்லாமல் இருந்திருக்கும், சிலருக்கு வளரும்பொழுதும், சிலருக்கு விபத்தினாலும்கூட கேட்கும் திறன் குறையவோ நிரந்தரமாகப் போகவோ செய்திருக்கும். அப்படி இருப்பவர்களுக்காகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஹியரிங்-எயிட் (hearing-aid) எனப்படும் செவிப்புலன் உதவிச் சாதனம். இன்று பெரும்பாலானோர் செவித் திறன் குறைவைக் கவனிப்பதில்லை, பெரிதுபடுத்துவதில்லை. மேலும், ஹியரிங்-எயிட் அணிவதை ஒரு வெட்கப்படும் விஷயமாகவே பார்க்கின்றனர். தங்கள் அழகினை குறைத்துவிடும் ‘வேண்டாத’ பொருளாகவே கருதுகின்றனர்.

ஆனால், செவி குறைபாடுள்ளவர்களின் வேதனையைக் குறைப்பதற்காகவே நவீன ஆராய்ச்சியாளர்கள் இப்பொழுது புது வடிவங்களில் ஹியரிங்-எயிட் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அப்படி ஒரு ஹியரிங் எயிட் தயாரிக்கும் நிறுவனம்தான் Digibionic Lifestyle India Pvt Ltd. இந்நிறுவனத்தின் இயக்குநர் Vicky Kumar உடன் கலந்துரையாடினோம். அவருடன் நடந்த உரையாடலின் தொகுப்பினைத்தான் இப்பொழுது இங்கே பகிர்கின்றோம்.

Vicky Kumar Director Digibionic & Madhuvanthi
Vicky Kumar – Director Digibionic & Madhuvanthi
Q

தங்களின் நிறுவனம் தாய்வான் நாட்டில் தொடங்கப்பட்டது என உங்களின் நிறுவன வலைப்பக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது, அப்படியெனில் இந்தியாவில் எப்பொழுது தொடங்கினீர்கள்? இதை யார் இங்கே தொடங்குவதற்குப் பரிந்துரை செய்தார்கள்?

A

கலந்துரையாடலைத் தொடங்குவதற்கு முன்பு, கல்கி ஆன்லைனில் எங்களைப் பற்றி எழுதுவதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவதற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆமாம், நீங்கள் கூறுவதுபோல எங்கள் நிறுவனம் Taiwan நாட்டில்தான் உள்ளது. நாங்கள் Digimax எனப்படும் ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆவோம். இந்த நிறுவனம் 2002இல் David Wu என்பவரால் தொடங்கப்பட்டது.

2009 வரை நாங்கள் பிற நிறுவனங்களுக்காக உற்பத்தி செய்துகொண்டிருந்தோம். இதன் மூலம் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலும் அதற்குப் பிறகு நாங்கள் செய்த ஆராய்ச்சிகளின் மூலமும் தொடங்கப்பட்டதுதான் Digibionic Lifestyle. இந்தியாவில், 2023இல் எங்களது நிறுவனத்தின் கிளையை ஒரு கூட்டு முயற்சியாக எனது தலைமையின் கீழ் தொடங்கினோம். எனக்கு, தயாரிப்பு மேலாளராக இந்தத் துறையில் நான்கு வருட அனுபவம் உள்ளது. 

Q

அனைவருக்குமே நன்றாகத் தெரியும் யாராலும் ஒரு நிறுவனத்தை உரிய அங்கீகாரம் இல்லாமல் தொடங்கமுடியாது. அதுவும் இந்த மாதிரி சுகாதாரம் சம்பந்தப்பட்ட துறையில். உங்கள் நிறுவனத்திற்கு எந்த மாதிரி அங்கீகாரம் உள்ளது?

A

ஹியரிங் எயிட் நிறுவனத்தைத் தொடங்க அங்கீகாரம் கண்டிப்பாக வேண்டும்.  ஆனால், நாங்கள் தற்சமயம் தைவானிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்கின்றோம். அதற்கு மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் அனுமதி வேண்டும். உதாரணத்திற்கு BIS, MD42 போன்ற சான்றிதழ்கள் வேண்டும்.

Q

நீங்கள் ஏற்கனவே சொன்னதுபோல இந்தத் துறையில் நிறைய முன்னோடி நிறுவனங்கள் உள்ளன. போட்டி பலமாக இருக்குமே?

A

எங்களின் தொழில் உத்தியின்படி எங்கள் அணுகுமுறை வேறு. அதைச் சொல்லுவதற்கு முன்பு உங்களுக்கு இந்த நிறுவனம் ஏன் தொடங்கப்பட்டது என்பதைக் கூறுகிறேன். எங்கள் நிறுவனர் David Wu அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குச் செவித் திறன் குறைபாடு பிரச்னை 1980களில் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இது மிகப் பெரிய குறையாகப் பார்க்கப்பட்டது. ஹியரிங்-எயிட் கிடைப்பது மிகப்பெரிய விஷயமாகவும் விலைமதிப்பு மிக்கதாகவும் இருந்தது. சில இடங்களில் இப்பொழுதும் இருக்கிறது என்பது வேறு விஷயம். தனது குடும்பத்தில் மிக அருகாமையில் இந்த ஏற்றத்தாழ்வைப் பார்த்த அவர் சாமானியர்களுக்கும் இந்த ஹியரிங்-எயிட் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்.

அதனால் எங்களின் தயாரிப்புகளை சமூகத்தில் கீழ்நிலையிலுள்ள மக்களுக்காக குறைந்த விலையில் அனைத்து அம்சங்களும் நிறைந்த வகையில் உருவாக்கியுள்ளோம். பெரும்பான்மையான மக்களுக்கு எங்கள் தயாரிப்பு சென்றடைய வேண்டும் என்று விரும்புகிறோம். மேலும், மற்ற பெரிய நிறுவனங்களுடன் கூட்டு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டுள்ளோம். இதனால் எங்கள் நிறுவனத்திற்கும் பிற நிறுவனங்களுக்கும் பெரிதாகப் போட்டியென்பது இல்லை. 

Q

பெரும்பாலான மக்களுக்கு ஹியரிங்-எயிட் எவ்வாறு வேலை செய்கிறது என்பது தெரிவதில்லை. அதைச் சிறிது விளக்க முடியுமா?

A

நமது செவிகளில் பொதுவாக மூன்று அடுக்குகள் உள்ளன. முதலில் வருவது செவிப்பறை எனும் இயர்-ட்ரம். இதில் ஏற்படும் அதிர்வுகள் அதனை அடுத்துள்ள செவி எலும்பைச் சென்றடைகிறது. இந்த எலும்பு அதனை அடுத்துள்ள கோக்லியர் எனப்படும் ஒரு நரம்பிற்கு அதிர்வுகளை அனுப்புகிறது. அங்கிருந்து நமது மூளைக்கு நியூரான்கள் மூலமாக சிக்னல் அனுப்பப்படுகிறது. இவ்வாறாக நம்மால்    கேட்கமுடிகிறது.

பொதுவாகச் செவிப்பறையில் மற்றும் செவி எலும்பில் உண்டாகும்  பிரச்னையினால் ஏற்படும் செவித் திறன் குறைபாட்டிற்கு மட்டுமே ஹியரிங்-எயிட் உபயோகப்படும். ஹியரிங்-எயிட் அணிவதன் மூலம் குறைவாகக் கேட்கும் வெளி சத்தத்தை அதிகரித்துக் கேட்க முடியும். தகுந்த ஹியரிங்-எயிட் அணிவதன் மூலம் எலும்புகளின் அதிர்வைத் தூண்டி, கேட்கும் திறனை அதிகரிக்க இயலும். பெரும்பாலானவர்களுக்குச் செவிப்பறையில்தான் பிரச்னை ஏற்படுகிறது. அதற்குரிய ஹியரிங்-எயிட் பயன்படுத்தினால் மற்றவர்களைப் போலவே இயல்பாக இருக்க முடியும்.

Vicky Kumar – Director Digibionic Lifestyle India Pvt Ltd
Vicky Kumar – Director Digibionic Lifestyle India Pvt Ltd
Q

ஹியரிங்-எயிட் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

A

செவித் திறன் குறைபாடு உள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு சில எழுத்துகளின் உச்சரிப்பு மட்டும் கேட்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஹியரிங்-எயிட் ஒரு பெரிய வரமாகும். அவர்கள் இதனை உபயோகித்தாலே போதும் வார்த்தைகளை எளிதில் கேட்கலாம். அவர்களின் புரிதலும் சுலபமாக இருக்கும். அவர்களைச் சுற்றி இருக்கும் பிற ஓசைகளைக் குறைப்பதிலும் இந்த ஹியரிங்-எயிட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது, அதனால் அவர்களால் எளிதில் அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முடிகிறது.

Q

பெரியவர்களுக்கு மற்றும் சிறியவர்களுக்கு எனத் தனித்தனியாக ஹியரிங்-எயிட் இருக்கிறதா? ஒருவருக்கு வேண்டிய வகையில் நிறம், அளவு போன்றவற்றை வடிவமைத்துக்கொள்ள முடியுமா?

A

பெரியவர்களுக்கு பொதுவாக ஒரு உருவளவுதான் இருக்கும், ஆனால் சிறியவர்களுக்கு அவர்களின் காதளவை பொறுத்து வடிவமைக்க வேண்டும். ஏனெனில் அவர்களின் காது ஒருவருக்கு ஒருவர் வித்தியாசப்படும். 

OTC எனப்படும் கடைகளில் கிடைக்கும் எங்களது ஹியரிங்-எயிடினை முற்றிலுமாக அவரவர் விருப்பத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, எங்களது செயலி(app) மூலம் மாற்றி அமைத்துக் கொள்ளமுடியும். (மேலும் விவரங்களுக்கு +91 6382 255 145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்)

Hearing-Aid-Digibionic Lifestyle India Pvt Ltd
Hearing-Aid-Digibionic Lifestyle India Pvt Ltd
Q

முதல் முறை ஹியரிங்-எயிட் உபயோகிக்கும் ஒருவர் அதற்கு தங்களைப் பழகிக்கொள்ள, பொதுவாக எத்தனை நாட்கள் எடுத்துக்கொள்வார்கள்? 

A

பொதுவாகப் பெரியவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வும், செயல்பாடும் ஓரளவு தெரியும் என்பதால் ஒரு வாரத்திற்குள் பழகிக்கொள்வார்கள். ஆனால், சிறுவர்களுக்கு இது இரண்டு முதல் மூன்று வாரங்கள்கூட ஆகும். ஏனெனில் இது அவர்களுக்குப் புதிது, என்ன நடக்கிறது என்பது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

Q

ஹியரிங்-எயிட் பற்றிய கட்டுக்கதைகள் என்ன? அதனை எப்படிக் களைவது?

A

ஹியரிங்-எயிட் பற்றிய மிகப் பெரிய கட்டுக்கதை அதனை அணிவதால் அணிபவர் வித்தியாசமாகத் தெரிவார்கள் என்பதுதான். உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சியின்படி உலகில் 8-10 சதவிகித மக்களுக்கு ஹியரிங்-எயிட் தேவைப்படுகிறது; ஆனால் அவர்கள் அதனை அணிவதைத் தவிர்க்கின்றனர். இதற்குக் காரணம் பெரும்பாலான நேரங்களில் சமூகத்தின் தாக்கம் அவர்களின் மேல் இருப்பதே.

இதற்காகவே நாங்கள் வடிவமைக்கும் பெரும்பாலான ஹியரிங்- எயிடுகள் பார்க்க புளூடூத் சாதனத்தைப் போலவே இருக்கும். சிறியதாகவும் காதுக்கு அடக்கமாகவும் இருப்பதனால் அணிபவருக்கு எந்தவிதச் சங்கடமோ கூச்சமோ இருப்பதில்லை. அவர்களால் அவர்களின் பணி இடங்களிலும் இதனால் எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல் சகஜமாக இருக்கமுடிகிறது.

Hearing-Aid-Digibionic Lifestyle India Pvt Ltd
Hearing-Aid-Digibionic Lifestyle India Pvt Ltd
Q

ஹியரிங்-எயிடை எவ்வாறு பராமரிப்பது?

A

வாரத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பாக நாங்கள் கொடுக்கும் எளிய சாதனைகளை வைத்து ஹியரிங்-எயிடினை சுத்தம் செய்ய வேண்டும்; ஏனெனில், காதுகளில் சேரும் எண்ணெய், மெழுகு போன்றவை ஹியரிங்-எயிடின் செயல் திறனைப் பாதிக்கும். 

Q

ஹியரிங்-எயிட் எந்த அளவிற்கு நீர் எதிர்ப்புத் திறன் கொண்டது?

A

பொதுவாக இது சிறிய சாதனம் என்பதாலும் அதனின் செயல் திறன் பாதிக்கப்படும் என்பதாலும் நீரில் இதனை உபயோகிக்க முடியாது. எங்களின் பிரீமியம் தயாரிப்பில் லேசான சாரல், தண்ணீர் படுதல் போன்றவற்றால் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், ஹியரிங்-எயிட்  குளியல், நீச்சல் போன்றவற்றைச் செய்ய இயலாது.

Hearing-Aid-Digibionic Lifestyle India Pvt Ltd
Hearing-Aid-Digibionic Lifestyle India Pvt Ltd
Q

உங்கள் தயாரிப்பிற்கும் மற்ற நிறுவனத் தயாரிப்பிற்கும் உள்ள மிக முக்கியமான வித்தியாசம் என்ன?

A

ஒரு மிக முக்கியமான வித்தியாசம் அல்லது நன்மை என்னவெனில் எங்களின் அனைத்து ஹியரிங்-எயிடும் ரீசார்ஜ் செய்துகொள்ளக்கூடிய வகையில் வடிவமைத்துள்ளோம். இரவு உறங்கச் செல்லும்முன் சார்ஜ் போட்டு அடுத்த நாள் காலை உபயோகப்படுத்தத் தொடங்கினால் அன்றைய தினம் முழுவதும் உபயோகிக்க முடியும். மற்ற நிறுவன தயாரிப்புகளில் மிகவும் விலை கூடிய சாதனங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது. 

Q

இந்தியாவில் உங்கள் நிறுவனம் எங்கு உள்ளது? மாற்ற மாநிலங்களில் எவ்வாறு விற்பனைக்குப் பின் இருக்கும் சேவையைப் பெறுவது?

A

எங்களது நிறுவனம் இப்பொழுதுதான் இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. இப்பொழுது சென்னையில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். மும்பை மற்றும் டெல்லியில் விநியோகஸ்தர்கள் மூலமாக விற்பனை செய்கின்றோம். தமிழகத்தில் சென்னையை மையமாக வைத்துச் செயல்படத் தொடங்கியுள்ளோம்.  

தற்சமயம் எங்களது சேவையைப் பெறச் சென்னை அலுவலகத்தை மட்டுமே அணுகமுடியும். விரைவில் பிற மாநிலங்களிலும் எங்கள் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். எங்களின் செயலியை வைத்தே வாடிக்கையாளர்களுக்கு எங்கள் சேவையை நல்ல முறையில் வழங்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு +91 6382 255 145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்

logo
Kalki Online
kalkionline.com