ஜோக்ஸ்; பணம் கொட்டலை… மனைவிதான் தினமும் கொட்டறா!

kalki Jokes in tamil
படங்கள்: பிரபுராம்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

பேஷண்ட்: அடிக்கடி ஞாபக மறதியாக இருக்கு டாக்டர்.

டாக்டர்: பார்த்தாலே தெரியுது. லேடீஸ் ஹேண்ட் பாக் கை எடுத்துட்டு வந்து இருக்கீங்க!

*******************************

கல்யாணம் பண்ணா பணம் கொட்டும் னு ஜோசியர் சொன்னதை நம்பி ஏமாந்துட்டேன்.

ஏண்டா?

பணம் கொட்டலை… மனைவிதான் தினமும் கொட்டறா!

*******************************

அடிக்கடி ஊரை விட்டு ஓடற மாதிரி கனவு வருது டாக்டர்.

எல்லோர்கிட்டேயும் கடன் வாங்கினா இப்படித்தான் கனவு வரும். கடன் வாங்குறதை குறைங்க, சரியாயிடும்!

*******************************

ஏண்டி, உன் வீட்டுக்காரர் திரு திரு ன்னு பார்த்துட்டு இருக்கார்?

அது ஒண்ணுமில்லைடி, டாக்டர்கிட்ட போயிருக்கார். அவர் 3திரு வை கடைபிடிங்கனு சொன்னாராம். தனித்திரு, விழித்திரு, பசித்திருனு சொன்னதை இப்படி புரிஞ்சிக்கிட்டார்.

*******************************

உங்களுக்கு தனி நபர் கடன் வேணுமா? வீட்டுக்கடன் வேணுமா?,

வாராக் கடன் னு சொல்றாங்களே அதை கொடுங்க சார்.

*******************************

மனைவியும்,கடவுளும் ஒண்ணுடா.

ஏன் அப்படி சொல்ற?

நாம கேட்கறதை விட்டுட்டு கேட்காததை தருவாங்க. அதனால் தான்.

*******************************

kalki Jokes in tamil
படங்கள்: பிரபுராம்

ஏன் சோகமா இருக்க?

ஸ்கூலில் பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க தெரியணும் னு பேரண்ட்ஸ்க்கும் ஹோம் ஒர்க் தராங்கடி!

logo
Kalki Online
kalkionline.com