இனிப்பு ஏன் இனிக்கிறது தெரியுமா?

Sweets...
Sweets...

றுசுவைகளுள் ஒன்று இனிப்புச் சுவை! ஆங்கிலத்தில் Sweetness என்று பொருள்!

தீஞ்சுவை என்றாலும் இனிப்புதான்!
தித்திப்பு என்றாலும் இனிப்புதான்!

தமிழ் மொழியில் தீ / தே - என்றால் இனிமை, இனிமையான என்று பொருள்.
தேன், தேம், தேநீர், தேங்காய், தேனிசை, தெவிட்டுதல், தேவாரம், தேம்பாவணி, தீந்தமிழ் ஆகிய அனைத்தும் இனிமை பொருள் குறிப்பனவே! (தேவாரம் -  என்றால் இனிய (பா)மாலை என்றும் பொருள் கொள்ளலாம்) .

தேன் > தேம் > தீம். (Sweet, Mellifluous, Delicious ).
தீம் = இனிமை, இனிய, அமுது.
தீம் = தேனொழுகும், இனிக்கும், தித்திக்கும், மதுரமான.
தீஞ்சுவை = இன்சுவை.
தீந்தமிழ் = இனிய தமிழ்.
தீங்கனி, தீந்தேன், தீங்கரும்பு, தீம்புனல் போன்ற சொற்களையும் நோக்குக.

அடுத்து, தகரம் சகரமாகத் திரிவது தமிழ் மொழியில் இயல்பாகும். இதன்வழி தீம் (தீ) - என்ற இனிமைப் பொருள் குறித்தது சீம் (சீ) - எனவும் பல்வேறு சொற்களைப் படைக்கும்.

Sweets...
Sweets...

சீம்பால் = இன்சுவையுடைய பால் திரட்டு.
சீதை (சீடை) = வெல்ல சீடை, இனிப்புப் பலகாரம்.
சீனி (ஜீனி) = சர்க்கரை.
சீரா (ஜீரா) = சர்க்கரைப் பாகு.
சீந்தில் கொடி = அமிர்தவல்லி.
சீந்தில் சர்க்கரை = சீந்தில் கொடியால் உருவான இனிப்பு உப்பு.
சீமுதை = கொடி முந்திரி, திராட்சை ( Sweet berry).
சீத்தாப்பழம் = இனிப்பு மிகுந்து - தித்திக்கும் பழம் என்று பொருள். ஆங்கிலத்தில் இதனை Sugar Apple என்றே அழைப்பதை நோக்குக.

அது சரி, தீஞ்சுவை தரும், தித்திப்பான, தெவிட்டக்கூடிய இச்சுவையை  தமிழ் மொழியில் ஏன் 'இனிப்பு' - என்று அழைத்தனர்?

இன் > இனி > இனிப்பு.
இல் > இன் என்பது 'மேலான/ உயர்வான' பண்பைக் குறித்த அடிச்சொல்.
இனி , இனும், இன்னும் என்றால் மேலும், மேலாக என்று பொருள்.

உதாரணமாக...
அதன் + இல் > அதனில்  = அதைவிட.
அதன் + இன் > அதனின்,
அதன் + இனும் > அதனினும் = அதைவிட, அதற்கு மேலே என்று பொருள்.
பொறுமை கடலினும் பெரிது - என்று சொல்கிறோமல்லவா?

இனி, இன்னும், இனிமேல் போன்ற அனைத்து சொற்களும் மேல் / மேலே என்ற பொருள்பட அமைந்த சொற்களாகும்.

* பத்தைவிட ஒன்று மேலானதே - பத்து + இன் + ஒன்று = பதினொன்று ஆனது.

* பத்தை விட மேலாக ஆறு கூடுதலானதே -
பத்து + இன் + ஆறு = பதினாறு.

இதையும் படியுங்கள்:
உணவுக்கு சுவையும், உடலுக்கு சுகத்தையும் தரும் பெருங்காயம்!
Sweets...

இனிப்பு, இனிமை = ஒன்றைவிட மேலாக, உயர்வாக, நன்மை தருவது, இனிமையானது.
அறுசுவைகளில் மேம்பட்டது, மேலானது என்று குறிக்கும் பொருட்டு அமைந்த சொல்லே - இனிப்பு.

இதனால்தான் மற்ற ஐந்து சுவைகளுக்கும் 'மேலான  சுவை' என்ற பொருளில் 'இனிப்பு' - என்று பெயர் கொண்டது.

கடைக்குறிப்பு : இவ்வளவு இனிப்பான 'சுவை' - என்னும் தமிழ்ச் சொல்லே இலத்தீன் மொழியில் Suavis என மாறி, பழைய ஆங்கிலத்தில் Swete என மருவி, கடைசியில்
ஆங்கிலத்தில் Sweet ஆனது.
சுவை > Suavis >  Swete > SWEET.

மேலை ஐரோப்பிய மொழிகளில் இனிப்பைக் குறிக்கும் சொற்கள் அனைத்தும் இதனையொட்டிப் பிறந்தவையே! என்ன வாசகர்களே! கேட்கவே இனிப்பாக இருக்கிறது அல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com