'அக்கு வேறு ஆணி வேறாக' – என்பது சரியா?

solvathellam thamizh...
solvathellam thamizh...pixabay.com

பேச்சு வழக்கில் இதனை - 'அக்கு வேறு ஆணி வேறாக' எனப் பிழையாகக் கூறினாலும், அக்கு வேர், ஆணி வேராக - என்பதே சரியானது, பொருள் பொதிந்த இணைச் சொற்களில் ஒன்று.

இணைச்சொற்கள் என்பது தமிழ்மொழியில் இணையிணையாக அமையும் சில சொற்களைக் குறிக்கும். இவற்றைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தினால் சுவை கூடும், மொழிநடை சிறக்கும், சொல்லப்படும் கருத்தும் திருத்தமாய் விளங்கும். உதா: கண்டம் துண்டமாக, அக்கு வேர் ஆணி வேராக.

அக்கு - என்றால் கூர்மை.
அக்குவேர் = சிறிய மெல்லிய கூர்மை வேர்கள் ( தண்டின் பக்கவாட்டில் வளர்பவை).

ஆணிவேர் = நிலத்தின் கீழ் ஆழமாக
ஊடுருவிச் செல்லும் மூலவேர்.

அக்கு வேர் ஆணி வேராக - என்றால்...
எந்த ஒரு விடயத்திலும் - நிகழ்விலும் – செயலிலும், சிறியனவற்றில் தொடங்கி, அவற்றின் மூலம், ஆதாரம், அடிப்படை வரை ஆழமாக நோக்கி ஆய்வு செய்தலைக் குறிக்கும்.

எந்தச் சிறிய காரணிகளைக் கூட விலக்காமல் ஆழமாக ஆராய்வது.

உதாரணம் : காவல் ஆணையர் அந்த வழக்கை விசாரணை செய்து 'அக்கு வேர் ஆணி வேராய்' துப்பு துலக்கினார்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களுக்கான சிறந்த 20 Motivational Quotes! 
solvathellam thamizh...

கடைக்குறிப்பு :
அக்கு = என்றால் சிறியது, சிறு துண்டு, நுண்ணிய, கூரிய என்று பொருள்.
அக்கு அக்காக > அக்கக்காக - என்றால் துண்டு துண்டாக.
அக்கக்காகப் பிரிப்பது - SPLIT BY PARTS AND PIECES.
அக்கு + போர் > அக்கப்போர் = சிறு தகராறு , சிறு கலகம், தொந்தரவு.
அக்குணி = சிறிதளவு ( Small quantity) .
அக்குணிப் பிள்ளை = சிறுபிள்ளை.

எனவே இனிமேல் 'அக்கு வேர் ஆணி வேராக' என்று பிழையற்று பயன்படுத்துவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com