ஓவியங்கள்; பிரபுராம்
“என்ன டாக்டர், மொட்டை மாடியில் ஆபரேஷன் வெச்சிருக்கீங்க?”
“அப்போதான் சீக்கிரமா மேலே போவாங்க.”
***********************************************
“இங்கு கூடியிருக்கும் ஆயிரம் பொதுமக்களே!”
“அதெப்படி... தலைவர் கரெக்டா எண்ணிக்கை சொல்றாரு?”
“ஆயிரம் பேருக்குத்தான் பணம் கொடுத்து கூட்டிட்டு வரச் சொன்னார்.”
***********************************************
“அந்தக் கழுதை மேலே எதுக்கு நம்ம தலைவர் கேஸ் போட்டிருக்கிறார்?”
“நம்ம கட்சி போஸ்டரை தின்னுடுச்சாம்!”
***********************************************
“என் வீட்டுக்காரருக்கு குழந்தை மனதுடி!”
“அதுக்காக பொம்மை வாட்ச் கையில கட்டி விடறதெல்லாம் டூ மச்!”
***********************************************
“எப்படிடா மாறுவேடப் போட்டியில இப்படி அசத்தினே?”
“எல்லாம் கடன்காரங்களுக்கு பயந்து போட்ட வேடம்தான்.”
***********************************************
“என்ன இந்த நாடகத்துக்கு இவ்வளவு பெண்கள் கூட்டம்?”
“சாமியார் நாடகமாம்.”
***********************************************
“நீ முகமூடித் திருடன்னு சொல்றே. ஆனால், முகமூடியே காணோமே...”
“ மஃப்டியிலே வந்திருக்கேன் சார்!”
***********************************************
“அந்த டாக்டர் சில்ட்ரன் ஸ்பெஷலிஸ்டுன்னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”
“எல்.கே.ஜி., யு.கே.ஜி., எம்.பி.பி.எஸ். ன்னு போர்டு போட்டிருக்காரே!”