ஜோக்ஸ்: எல்லாத்துக்கும் துருவித் துருவி கேள்வி கேட்கிறார்!

Jokes
Jokesartist - pillai
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

தேங்காய் வியாபாரியை கல்யாணம் பண்ணனினது தப்பா போச்சு!

ஏன்?

எல்லாத்துக்கும் துருவித் துருவி கேள்வி கேட்கிறார்.

--------------------------------------------

அந்த வீட்டு நாய் ஏன் குரைக்கவே மாட்டேங்குது?

அவுங்க வீட்டுக் கதவுக்கு முன்னாடி No Parkingனு போர்டு வைக்கறத்துக்குப் பதிலா No Barking னு வெச்சுட்டாங்களாம்!

--------------------------------------------

அவர் போலி டாக்டர்தான்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?

பேஷண்டோட பல்ஸ் எப்படியிருக்குன்னு கேட்டா அதுக்கு பல் டாக்டர் கிட்ட போங்கன்னு சொல்லி இருக்கார்!

--------------------------------------------

அந்த Bread கடைக்காரர் வீட்டுக் கல்யாணம் எப்படி நடந்தது?

நல்லா ஜாம் ஜாம் னு நடந்தது!

--------------------------------------------

மன்னர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர் போலிருக்கிறது.

எப்படிச் சொல்கிறீர்கள்?

தமிழ் மொழியில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை "போர்"னு அடிக்கடி சொல்கிறாரே!

--------------------------------------------

-ரேவதி மகேஷ்

logo
Kalki Online
kalkionline.com