ஜோக்ஸ்: கொட்டுது மழை குழம்புது மூளை!

Pouring rain...
Rain jokes...
Published on

டாக்சி டிரைவர் (செல்லில்) : ஆமா! டிரைவர்தான்! அட்ரஸ் சொன்னீங்க சரி! 'டாக்சி' யா...'போட்டா' ன்னு சொல்லலியே! அதைக் கேட்கத்தான் இந்த போன்!...

                                                         👮👮👮

"என்ன? மெட்ராஸ் மாப்பிள ரொம்ப மெதப்பில இருக்காரு?!"

"பத்துப் பதினைஞ்சு நாளா மெதந்துக்கிட்டே இருந்தவரில்ல!! அப்படித்தான் இருப்பாரு!

                                                    🐠🐟🐠🐟🐠🐟

ஒரு கிராமவாசி (பேப்பரைப் படித்துக் கொண்டு): வெயில்லதான் மூளை கலங்குமுன்னு சொல்லுவாங்க! ஆனா இந்த சென்னைக்கார ஆளுங்களுக்கு மழையிலயும் மூளை கலங்குது! தண்ணிக்குள்ளாற ஒக்காந்துகிட்டே குடிதண்ணி கேட்டுப் போராடறானே! அவனை என்னன்னு சொல்றது?

                                                      😉😌😉😌😉😌

குழந்தை(தந்தையிடம்): சொல்லுப்பா? மரம் கொறைஞ்சதாலதான் மழை வர்றலைன்னு போன மாசம் சொன்னியே! ஒருமாசத்துக்குள்ளாற மரம் வளர்த்திட முடியுமா? சொல்லுப்பா?! சொல்லு!! இப்ப எப்படி திடீர்னு இவ்வளவு மழை கொட்டுது?

                                                      🍊🍏🍋🍊🍏🍋

ஹவுஸ் ஓனர்(கடவுளிடம்): நன்றி கடவுளே! அவனையும் அவன் குடும்பத்தையும் எப்படி வெரட்டுறதுன்னு ரொம்பப் பயந்துக்கிட்டிருந்தேன்! என்னைக் காப்பாத்திட்டே!!

                                                        🏘🏘🏡🏡🏤🏤

"என்னடி குழப்பறே! நீ லவ் பண்றது டாக்சிகாரனையா? இல்லை... போட்காரனையா?"

"நீ ஏண்டி குழம்பறே? ரெண்டு பேருமே ஒருத்தன்தாண்டி! போன மாசம் டாக்சி ஓட்டினான்! இப்ப போட் ஓட்டறான்!"

                                                         🚗 🚤🚖⛵️🚘🛳

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com