ஜோக்ஸ்; 'தாலி வரம்கேட்டு வந்தேன் தாயம்மா'

kalki jokes
kalki jokes
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

- நடேஷ் கன்னா

"என்னடி உன் வீட்டுகாரர் குழந்தைகளுடன் ஒருவாரமா சிரிச்சு விளையாடிகிட்டு இருக்காரு?"

"அதை ஏன் கேட்கிற! ஒரு வாரமா அவர் ஃபோன் ரிப்பேர்!"

*********************************

"ஜோசியரே! என் வாழ்க்கையில் ஒளி ஏத்த டார்ச் லைட் மாதிரி ஒரு பொண்ணு வருவானு சொன்னீங்களே!?"

"ஆமா, அதுக்கு என்ன இப்போ?"

"என்னை 'டார்ச்சர்' பண்ற பொண்ணுதான் வந்து இருக்கா!"

*********************************

"என்னடா, தாடி வளர்க்குறே?

"லவ் ஃபெயிலியரா சக்ஸஸ்ஸானு தெரியல."

"அதுக்கு ஏண்டா கவலைப்படறே?" 

"ஃபெயிலியரா இருந்தா தாடி மட்டும் வளர்த்தாபோதும்; அதுவே சக்சஸ் ஆனா பொண்டாட்டி பிள்ளைகளை வளர்க்க வேண்டிவருமே!"

*********************************

"தலைவரே தேர்தல் வருது... நாம எப்படி சம்பாத்தியம் பண்றது?"

"ஆளும் கட்சி உடன் கூட்டணி என்று ஒரு சூட் கேஸ்; எதிர்கட்சி உடன் கூட்டணி என்று ஒரு சூட் கேஸ். அப்புறம் நம்ம தோட்டத்தில் வச்சு பிரிச்சிக்க வேண்டியதுதான்."

*********************************

"உங்க மனைவி உங்ககிட்ட பாசமா இருக்கானு எப்படி சொல்றீங்க?"

"நான் இரண்டு தும்மல்தான் போட்டேன். அதுக்கு சாமி படத்துக்கு முன்னாடி நின்னுகிட்டு 'தாலி வரம்கேட்டு வந்தேன் தாயம்மா' அப்படினு பாட்டு பாடுறா!"

*********************************

Kalki Jokes
Kalki Jokes

"உங்களுக்கு எப்படிபட்ட பொண்ணு வேணும்?"

"இப்ப இருக்கிற பொண்டாட்டி மாதிரி வேண்டாம் ஜோசியரே!"

*********************************

"என்னங்க, உங்களுக்கு ஹேப்பி நியூ இயர்..." 

"பிராமிசாதான் சொல்றியா?"

*********************************

"என்னடி, ஒரு செருப்பு செலக்ட் பண்ண இத்தனை கடை ஏறி இருங்குற?"

"செருப்பையாவது நல்லபடியா செலக்ட் பண்ணுவோமேன்னுதான்!"

logo
Kalki Online
kalkionline.com