ஜோக்ஸ்: '’என்ன செருப்புல கண்டமா’’?

Kalki jokes
படங்கள் : பிள்ளை
Published on

"நீகூட்டுக்குடித்தனத்துல இருக்கிறதாசொல்றியே, உன்கூடயாராருஇருக்காங்க?"

 "நான், என்மனைவி, ரெண்டுகுழந்தைகள்… எல்லாருமே ஒரேவீட்டுலதான்இருக்கோம்!"

***********************************************

"கல்யாணம் எதுக்கும் போனா, செருப்பு, கிருப்பு எடுத்துத்தொலையாதீங்க?"

 "ஏன்... திடீர்னு அப்படிச் சொல்ற?"

"உங்களுக்குச் செருப்புல கண்டம்னு ஜோசியர் ஒருத்தர் சொன்னாரு...” 

***********************************************                     

"தூக்கத்துல யார் எழுப்பினாலும் என் மனைவிக்குக் கடுங்கோபம் வந்துடும்!'

"அதான் பீரோ சாவி கேட்ட திருடனை, பின்னி பெடல் எடுத்துட்டாங்களா..?"

***********************************************

“என்ன இது....நேத்து ஏன் ஆபீசுக்கு வரலைன்னு கேட்டா, இப்படி லீவ் லெட்டர்ல அஞ்சு, ஆறு காரணங்களை எழுதி வச்சிருக்கீங்க?"

"உங்களுக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு காரணத்தை டிக் பண்ணிக்குங்க சார்!"

***********************************************

என்னங்க இது... ஆளுக்கு ஆள் உட்கார்ந்துக்கிட்டு ஊசியில நூல் கோர்க்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காங்க?''

“இந்த டாக்டர் வித்தியாசமா கண் டெஸ்ட் பண்ணுவார்னு சொன்னேன் இல்லையா... அதான்!"

***********************************************

“டேய்... எங்க அம்மாவும் மனைவியும் சேர்ந்து செஞ்ச புடலங்காய் கூட்டு வாயில வைக்கவே முடியலை..."

"அப்போ அது 'கூட்டுச் சதி'ன்னு சொல்லு!"

***********************************************

 “நீ வாங்கியது போலி பஞ்சவர்ணக்கிளின்னு எப்படிச் சொல்றே?"

“அதுமேல தண்ணி பட்டதும் சாயம்போகுதே..."

***********************************************

“தலைவர் ஏன் சோகமா இருக்கார்?”

“கட்சித் தொண்டன் ஒருத்தன் கட்சியை ‘ஓ எல் எக்ஸ் 'ல விற்க முயற்சி பண்ணானாம்!"

***********************************************

“ஆபரேஷன்தியேட்டருக்குப் போகும்போது பேஷண்ட் கொஞ்சமும் பயப்படாமல் சிரிக்கிறாரே!”

“இடுக்கண் வருங்கால் நகுக என்கிறார்.”

படங்கள்  : பிள்ளை
படங்கள் : பிள்ளைKalki jokes

***********************************************

“மாப்பிள்ளையின் காது மந்தம்னு எப்படிக் கண்டுபிடிச்சாங்க?”

“டவுரி எவ்வளவு எதிர்பார்க்கிறீங்கன்னு கேட்டால் பெண்ணுக்கு சவுரிமுடி இருந்தாலும் பரவாயில்லைன்னு அவர் சொன்னதை வைத்துத்தான்.”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com