ஜோக்ஸ்: திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி வந்திருப்பார்..!

Kalki jokes
ஓவியம்: பிரபுராம்
Updated on

"போருக்குச் சென்ற மன்னருக்கு கழுத்து வலியாம் வைத்தியரே!"

 "திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடி வந்திருப்பார்...!"

*****************************

"உங்க ஜோக்ஸுக்கு முதல் வாசகி உங்க மனைவிதானாமே சார்?"

"கடைசி வாசகியும் அவதான்; படிச்சுப் பார்த்துட்டு, கிழிச்சு  டஸ்ட் பின்ல போட்டுடுவா?"  

*****************************

"பள்ளிக்கூட நாட்களிலேயே தலைவர் மாறுவேடப் போட்டிகள்ல  நிறைய பரிசு வாங்கியிருக்காராம்..?"

"அதான் கைது பண்ண முடியாமல் போலீஸ் திணறிட்டாங்களா...?"

*****************************

கூட்டத்துல பேச வந்த தலைவர்நாற்காலியில  உட்காராம தரையில உட்கார்ந்துக்கிட்டு இருக்காரே?

அவருக்கு நாற்காலி ஆசை  இல்லை என்கிறதை  சூசகமா  சொல்றாரு!

Kalki jokes
ஓவியம்: பிரபுராம்

*****************************

இன்ஸ்பெக்டர் ஏன் ஏட்டய்யாவை இந்த திட்டு திட்டறார்?

தீவிரவாதியை பிடிச்சுக்கிட்டு வரச்சொன்னதுக்கு தீவிர வியாதி உள்ள ஒருத்தனை பிடிச்சுக்கிட்டு வந்திட்டாராம்!

*****************************

எங்க தலைவருக்கு தன்மானத்தோட வாழறதுதான் பிடிக்கும். உங்க தலைவருக்கு?

சன்மானத்தோட!

*****************************

தலைவர் பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்ததாச் சொல்றாங்களே! நம்ப  முடியலயே!

திருட்டுத் தொழில்ல ஈடுபட்டிருந்தார் என்பதையா?

பள்ளிக்கூடத்துல படிச்சார் என்பதை!

logo
Kalki Online
kalkionline.com