
“நீ திருடினது உண்மையா? சொல்லுடா?”
“நானே சொல்லிட்டா நீங்க கண்டுபிடிக்க எதுக்கு இருக்கீங்க ஏட்டைய்யா?”
*************************************
“டாக்டருக்கு வரவர ஞாபக மறதி அதிகமாயிட்டேப் போகுது...
“அப்படி என்ன பண்ணிட்டாரு?”
“ஆபரேஷன் தியேட்டருக்குப் பதிலா அபிராமி தியேட்டருக்குப் போயிட்டார்.”
*************************************
“டாக்டர்... பேஷண்ட் பாதி ஆபரேஷன்லேயே மயக்கம் தெளிஞ்சிட்டாரு. என்ன செய்ய?”
“ஆபரேஷன் பீஸ் எவ்வளவுனு சொல்லு போதும்.”
*************************************
“நீங்க கொடுத்த பிளானை வச்சுத்தான் இதைக்கட்டினேன்.”
“அப்படியா? கொண்டா அந்தப் பிளானைப் பார்க்கலாம்.”
“அஸ்திவாரத்துக்கு அடியிலேதான் அது இருக்குது!”
*************************************
“அந்த நெய் தயாரிப்பு நிறுவனத்தை ஏன் சோதனை போடறாங்க?”
“மணல் மணலாக நெய் இருக்கும்னு சொன்னாங்களாம்!”
*************************************
“என் மனைவி மார்டன் ஆர்ட் மாதிரி...
“அவ்வளவு அழகா?”
“இல்ல, புரிஞ்சிக்கவே முடியாது.
*************************************
“நீ சாப்பாடு போடாம இப்படியே சீரியல் பார்த்துட்டு இருந்தனா, நான் தர்ணா பண்ணுவேன்...
“அப்படி ஓரமா போய் பண்ணுங்க. டி.வி. மறைக்குதுல.
*************************************
“வேட்பாளர் ஏன் கடுப்பாக இருக்கிறார்?”
“வெற்றி வேட்பாளர் என்று சொல்வதற்குப் பதிலா இவரை வெட்டி வேட்பாளர் என்று சொல்லிவிட்டாராம்.