ஜோக்ஸ்; ’’இளைஞர் அணி பதவியிலிருந்து நீக்கப் போறோம் தலைவரே’’!

Kalki jokes in tamil
ஓவியம்; பிரபுராம்
Published on

இன்னும் ஒரு கட்சி மட்டும்தான் நான் தாவ மிச்சமிருக்கு!

எந்தக் கட்சி தலைவரே?

நேத்து நான் கூட்டத்துல பேச வந்தபோது கறுப்புக்கொடி காமிச்ச கட்சி!

*******************************

என்னோட அறுபதாம் கல்யாணத்துக்கு என்னய்யா செய்யப்போறீங்க?

உங்களை, கட்சியோட இளைஞர் அணிப் பதவியிலிருந்து  நீக்கப்போறோம் தலைவரே!

*******************************

டாக்டர் சர்டிபிகேட்  வேணும் சிஸ்டர்!

டாக்டர் கிட்டேயே பிளஸ் டூ வரைக்கும் படிச்ச சர்டிபிகேட் தானே இருக்கு!

*******************************

தலைவரே! நீங்க இன்னும் மாறவே இல்லைன்னு ஜனங்க பேசிக்கிறாங்க!

நாளைக்கே புதுசா ஆரம்பிச்ச கட்சிக்கு மாறிடுறேன்யா!

*******************************

தலைவரே அமலாக்கத்துறை விசாரணை செஞ்சப்ப உங்க மேலே கையை வைக்கலையாமே?

காலைத்தான் வச்சாங்க!

*******************************

சுயசரிதை எழுதி வெளியிட்டதும் அதை விழா எடுத்துக்கொண்டாடலாம்னு நினைக்கிறேன்யா!

ஜெயில்ல அதுக்கொண்ணும் பெர்மிஷன் தரமாட்டாங்க தலைவரே!

Kalki jokes
ஓவியம்; பிரபுராம்

*******************************

சற்று நேரத்தில் டாக்டர் உங்களை செக் பண்ண வருவார்!

எனக்கு என்ன வியாதின்னு தெரிஞ்சுக்கவா சிஸ்டர்?

உங்களுக்கு பேங்க் பேலன்ஸ் எவ்வளவு இருக்குன்னு தெரிஞ்சுக்க!

*******************************

தலைவரை விசாரிக்க வந்த கமிஷன்  அதிகாரிகள் ஏன் விழுந்தடிச்சுக் கொண்டு ஓடுறாங்க?

தலைவர் அவங்ககிட்டயே கமிஷன் கேட்டாராம்!

*******************************

தலைவரே! இவ்வளவு அதிக ஓட்டு வித்தியாசத்தில் நீங்க தோத்துப்போனது நல்லதாப் போச்சு!

எப்படிச் சொல்றேய்யா? உங்களுக்கு இரண்டு மாநிலங்களோட கவர்னர் பதவி தரப்போறாங்ளாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com