ஜோக்ஸ்; நான் சொன்ன லேப்ல டெஸ்ட் பண்ணலையா?

Kalki jokes
ஓவியம்; பிள்ளை
Published on

எப்பல்லாம் சார் உங்க மனைவிக்கு தலைவலி வருது?

எங்க வீட்டுக்கு என்னோட அம்மா வரும்போது!

**********************************

உன் கணவர் காணாமப் போனதுக்கு ஏண்டி உன் போட்டோவை போட்டு காணவில்லைன்னு விளம்பரம் செஞ்சிருக்கே?

நான் காணாமல் போனது தெரிஞ்சா என் கணவர் உடனே வீட்டுக்கு திரும்பி வந்துடுவார்!

**********************************

என்னோட டெஸ்ட் ரிப்போர்ட்  எல்லாம் நார்மல்னு என்னோட ஃபோன்ல மெசேஜ் வந்திருக்கு  டாக்டர்!

அப்போ நான் சொன்ன லேப்ல டெஸ்ட் பண்ணலையா?

**********************************

மாமியார் வந்தா ஏன் கண்ணாடி போட்டுக்கறே மாலா?

தலைவலி வந்தா கண்ணாடி போட்டுக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்கார்!

**********************************

 புலவர் ஒருவேளை சோத்துக்கே கஷ்டப்படறார் அமைச்சரே!

"பொய் சொன்ன வாய்க்கு போஜனம்  கிடைக்காது" என்று சொல்வார்களே மன்னா!

**********************************

தலைவர் பேசப்போற மீட்டிங்க்கு எதுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்கிறார்?

மைதானத்துல தனியா இருந்தா தலைவருக்கு பயம் பிடிச்சுக்குமாம்!

ஓவியம்; பிள்ளை
ஓவியம்; பிள்ளைKalki jokes

**********************************

போருக்குப் போகும் எனக்காக  நீங்க ஒரு காரியம் செய்ய வேண்டும்  அமைச்சரே!

போர் முடிந்ததும் தானே உங்க  "காரியம் " செய்வாங்க மன்னா?

**********************************

அந்தக் கல்யாணத்துல கலந்துக்க வந்தவங்க 108 ரூபாய் மொய் எழுதறாங்களே?

அது ஆம்புலன்ஸ் டிரைவர் பொண்ணு கல்யாணமாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com