நான் என்ன பேசினாலும் கூட்டத்துக்கு வந்தவங்க கைதட்ட மாட்டேங்கிறாங்களே?
அரசியலுக்கு முழுக்குப் போடப்போறேன்னு சொல்லிப்பாருங்க தலைவரே! கை தட்டல் வானைப்பிளர்க்கும்!
***********************************************
உங்களுக்கு வந்த தலைசுற்றல் வியாதிக்கு, நீங்க தினமும் நிறைய ஆப்பிள் சாப்பிட வேண்டும்!
அதனோட விலையைக் கேட்டப்பத்தான் தலைசுற்றலே ஆரம்பிச்சுது டாக்டர்!
***********************************************
நான் சொன்ன மாதிரி தினமும் காலையில வாக்கிங் போறதினால என்ன தெரிஞ்சுகிட்டீங்க?
எந்தக் கடையில போண்டா நல்லாயிருக்கும், எந்தக் கடையில பஜ்ஜி நல்லா இருக்கும்னுதான் டாக்டர்!
***********************************************
நான் பேசப்போற கூட்டத்துக்கு சேர் எல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சா?
தேவையில்லாம எதுக்கு தலைவரே பணத்தை வேஸ்ட் பண்றீங்க?
***********************************************
மெகாசீரியல் டைரக்டர் ஆபீஸ்ல எதுக்கு ஜோசியரை வேலைக்கு வெச்சிருக்காங்க?
நடிக்க வந்தவங்களோட ஆயுசு கெட்டியான்னு ஜோசியர் அவங்க கைரேகையை பார்த்துச் சொல்வார்!
***********************************************
தலைவர் வீட்டுக்குத் திருடப் போனது தப்பாப் போச்சா, எப்படிச்சொல்றே?
எனக்கு முன்னால வந்த ரெய்டு அதிகாரிகள் எல்லாத்தையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க!
***********************************************
உங்க புதுப்படம் ஏன் ஓடல?
படத்தோட கதை என்னோடதுன்னு சொல்லி இதுவரைக்கும் யாரும் கோர்ட்ல கேஸ் போடலையே!
***********************************************
எங்க வங்கியில லோன் கிடைக்கணும்னா செக்யூரிட்டி வேணும்!
நான் ஒரு கம்பெனியில் செக்யூரிட்டியாத்தான் வேலை செய்யறேன் சார்!
***********************************************
பிடியுங்கள் புலவரே நூறு பொற்காசுகள்! நான் பாட ஆரம்பிக்கவே இல்லையே மன்னா?
அதற்காகத்தான் புலவரே!
***********************************************
மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஒரு வாரத்துக்குள்ள கல்யாணம் நடத்தி முடிச்சுடணும்னு சொல்றாங்களே?
மாப்பிள்ளைக்கு ஒரு வாரம்தான் ஜாமீன் கிடைச்சிருக்கு!