ஜோக்ஸ்; ஊறுகாய் தொட்டுக்கலாமா டாக்டர்?

kalki jokes
ஓவியம்; பிள்ளை
Published on

கூட்டத்துல தலைவர் கடைசியா பேசின வார்த்தைக்கு ஏகப்பட்ட கைதட்டல்!

அப்படி என்ன பேசினார்?

இத்துடன் என் பேச்சை முடித்துக்கொள்கிறேன் என்று தான்!

***************************************

தர்பாருக்கு போகலாமா மன்னா?

அதுக்கு ஏன் இவ்வளவு அவசரம் அமைச்சரே? முதலில் பாருக்குப் போகலாம்!

***************************************

குடியை மறக்க தினமும் மூணுவேளை இந்த டானிக்கை குடிக்கணும்!

ஊறுகாய் தொட்டுக்கலாமா டாக்டர்?

***************************************

தலைவருக்கு துண்டுபோட நமது கட்சிக்காரங்க ரொம்ப ஆசைப்படறாங்க!

அப்ப எதிர்க்கட்சிக்காரங்க?

தலைவரையே "துண்டு"  போடணும்னு  ஆசைப்படறாங்க!

***************************************

உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு உங்க பக்கத்து வீட்டு கிஷோர் ஒத்தக் கால்ல நின்னானே, இப்ப அவன் எப்படி இருக்கான்?

கால்வலி தாங்க முடியாம ஹாஸ்பிடல்ல டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டிருக்கான்!

***************************************

வர வர தலைவர் ஆன்லைன் மீட்டிங்கைத்தான் ரொம்ப விரும்புகிறார்!

ஏன் அப்படி?

செருப்பு, தக்காளி, முட்டை, கல்வீச்சு போன்றவைக்கு ஒன்றும் பயப்பட வேண்டாமே!

***************************************

kalki jokes
ஓவியம்; பிள்ளை

என்னப்பா சர்வர்,  கல்தோசை பார்சல் வேணும்னு கேட்டுக்கிட்டு 

நிறைய பேர் ஹோட்டலுக்கு வந்திருக்காங்க?

பக்கத்து மைதானத்துல தலைவர்  பேசப்போறாராம், அவர் மேல வீசத்தான் முதலாளி!

***************************************

என்ன ராப்பிச்சை திருவோட்டுல சிகப்பு விளக்கு எரியுது?

நீங்க போட்டது ஊசிப்போன சாப்பாடுன்னு சொல்லுது தாயீ!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com