ஜோக்ஸ்; அஞ்சு கலர் மாத்திரையைத் தந்து 50 ரூபாய் வாங்கிட்டாங்க!

Kalki Jokes
Kalki Jokes
Published on

மெடிக்கல் ஸ்டோர்ல போய் ஒரு துண்டு சீட்டைக் காமிச்சு இந்த அட்ரஸ் எங்கே இருக்குன்னு கேட்டது தப்பாப் போச்சு!

என்னாச்சு? அஞ்சு கலர் மாத்திரையைத் தந்து 50 ரூபாய் வாங்கிட்டாங்க!

------------------------------------------------------

எதுக்கு தலைவரே, கண் டெஸ்ட் பண்ணிக்க இவ்வளவு தயங்குறீங்க?

நான் பள்ளிக்கூடத்துக்கு போகாதது  டாக்டருக்கு தெரிஞ்சிடுமேன்னுதான்!

------------------------------------------------------

உங்க கடையில இருந்து மைசூர்பா வாங்கினப்போ ஒரு விசிட்டிங் கார்டு தந்தீங்களே, யாரோடது?

பல் டாக்டரோடதுதான்!

------------------------------------------------------

ஜப்பான்ல பொறந்த குழந்தைக்கு பல்லு எந்தக் கலர்ல இருக்கும்?

பொறந்த குழந்தைக்கு எங்கேயிருந்து டீச்சர் பல்லு?

------------------------------------------------------

எங்க கட்சியில வாரிசு அரசியலுக்கு இடமில்லைன்னு தலைவர் சொல்றாரே?

சின்ன வீடு பிரச்னை பண்ணிடுவாளோன்னு பயந்துக்கிட்டுத்தான்!

------------------------------------------------------

ஹலோ! மாலா இருக்காளா?

அவ சமையல் வேலை செஞ்சுக்கிட்டிருக்கா!

சாரி! ராங் நம்பர்!

------------------------------------------------------

என்னோட சுயசரிதையை சீர்தூக்கி மதிப்பிட்டாங்களா?

ஆமாம் தலைவரே, சரியா ஒரு கிலோ இருந்ததாம்!

Kalki Jokes
Kalki Jokes

------------------------------------------------------

உங்க வீட்டுக்கு திருட வந்தவன் பேர்ல நீங்க ஏன் புகார் தரல?

உங்களுக்குத் தரக்கூட ஒண்ணும் மிச்சம் வைக்காம எல்லாத்தையும் அவன் சுருட்டிக்கிட்டுப் போயிட்டானே  இன்ஸ்பெக்டர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com