
கல்கி ஆன்லைனில் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவுச் சிறுகதைப் போட்டியின் அறிவிப்பினைக் கண்டதும் ஏராளமான சிறுகதைகள் வந்து குவிந்தன. போட்டிக்கு வந்த கதைகள் மிக அதிகம் என்பதோடு, வித்தியாசமான கதைக்களங்களுடன், புதுமையான கருத்துகளைத் தாங்கி, யதார்த்தமான கதைகளும், சமூகச் சிந்தனையைத் தூண்டும் கதைகளும் வந்திருந்தன. மிக்க மகிழ்ச்சி.
நடுவர்கள்:
பத்திரிகையாளர்கள் ஜி.எஸ். சுப்ரமணியம், வெங்கடராமன் ராமசுப்ரமணியம், பத்மினி பட்டாபிராமன், சுஜாதா, மற்றும் சேலம் சுபா இவர்களுடன் முன்னாள் கல்கி பொறுப்பாசிரியர் ரேவதி சூர்யா அவர்களும் சேர்ந்து கதைகளைப் பரிசீலித்துப் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்தனர். நடுவர்கள் திக்குமுக்காடி போனார்கள் என்றுதான் சொல்லவேண்டும். அவர்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது! நன்றி நடுவர்களே!
ஆர்வமுடன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. பரிசு பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.
முதல் பரிசுக்குரிய சிறுகதை கல்கியின் பிறந்த நாளான செப்-09 (நாளை) Kalkionline.com இணையதளத்தில் வெளியாகும். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒரு பரிசுக்கதை வெளியாகும்.
பரிசு பெரும் கதைகள் - எழுத்தாளர்கள்
முதல் பரிசு: 7500/- பெறும் சிறுகதை
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் - மாலா மாதவன்
இரண்டாம் பரிசு: 5000/- பெறும் சிறுகதை
ப்ளாஸ்டிக் ப்ளாஸ்டிக் - ஜெயபிரகாஷ் சுகவனம்
மூன்றாம் பரிசு: 3000/- பெறும் சிறுகதை
ரசிக்கும் சீமானே - ஆர்.வி.சரவணன்
ஆறுதல் பரிசு தலா ரூ.1,000 பெறும் ஐந்து கதைகள்:
எங்கிருந்தோ வந்தான் - ப்ரஸன்னா வெங்கடேஷ்
பிரம்மா - லீலா ராமசாமி
ருத்ரதாண்டவம் - அனுராதா ஜெய்ஷங்கர்
கலவரமும் கல்யாணமும் - கெளரி கோபாலகிருஷ்ணன்
விடாது கருப்பட்டி - தமிழ்செல்வன் ரத்தினபாண்டியன்