Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyamஓவியம் பிள்ளை

‘காலச்சக்கரம் நரசிம்மா’வின் ராஜபாட்டை ரகசியம்..!

ராஜபாட்டை - ஆட்சி செய்பவர்களும், அதிகாரிகளும் உழலும் இடம். அந்த பாட்டையில்தான், பல ரகசியங்கள் வெளியாகும்.

ரகசியங்கள் - பாதுகாக்க பட வேண்டியவைதான் என்றாலும், சில சந்தர்ப்பங்களில் ரகசியங்களை மற்றவர்களிடம் இருந்து மறைப்பது பொய் சொல்வதுபோல ஆகிவிடும். அல்லது சொல்லாமல்விட்டால் சொதப்பலாகிவிடும். அதனால்தான் பத்திரிகையாளர்கள் அரசியல், சினிமா, விளையாட்டு என்று மக்கள் அதிகம் பின்தொடரும் துறைகளில் உள்ள உண்மைகளை பொதுமக்களின் காதோடு கிசுகிசுக்கும் ‘செய்தி’களாக அவ்வப்போது வெளியிடுகிறார்கள்.

அந்த வகையில் கல்கி ஆன்லைன், சர்வதேச, தேசிய மற்றும் மாநில அரசியல் விவகாரங்களை, நடப்புகளை, உங்களுக்கு அளிக்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், உங்களுக்காக சுடசுட அரசியல் செய்திகளை, தகவல்களை, விமர்சனங்களை, திரைக்குப் பின் அரங்கேறும் சம்பவங்களை, திரைக்கு முன் அரங்கேறும் நாடகங்களை, காதோடு கிடைக்கும் கிசுகிசுக்களை எல்லாம் திரட்டி ஞாயிறுதோறும் உங்களுக்கு அளிக்க உள்ளது கல்கி ஆன்லைன்.

உங்கள் காதோடு பேசப் போவது யார்?

‘தி இந்து’வின் முன்னாள் நிர்வாக ஆசிரியர், எழுத்தாளர் மற்றும் அரசியல் விமர்சகர், ‘காலச்சக்கரம் நரசிம்மா’ இந்த கட்டுரைகளை எழுத உள்ளார். அதுவும் எப்படி?

‘ஜோ’ என்று கொட்டும் மழையில் சுடச்சுட 5 – 6 பஜ்ஜிகளை ருசித்து ரசிப்பதைப் போல, பரபரப்பான அரசியல் பின்னணிச் செய்திகளை சுடச்சுட வழங்கப் போகிறார். அந்த 5 – 6 பஜ்ஜிகளைடையே ‘நறுக்’கென்று காரசாரமான மிளகாய் பஜ்ஜிகள் நிச்சயம் இருக்கும்!

இந்த ராஜபாட்டையில், சிந்தனையை தூண்டும் சூசக தகவல்கள் இருக்கும், நையாண்டி இருக்கும், நகைச்சுவை இருக்கும். ஆனால், சர்ச்சைகளுக்கும், பிரச்னைகளுக்கும் இந்த ராஜபாட்டையில் இடம் இருக்காது.

ராஜாங்க விஷயங்களை, ரகசியங்களை, அப்போதைக்கு அப்போதே தெரிந்துகொள்ள புறப்படுவோம் இந்த ராஜபாட்டையில்!

கல்கி ஆன்லைன் வழங்கும் ‘காலச்சக்கரம் நரசிம்மா’வின் ‘ராஜபாட்டை ரகசியம்’

நாளை முதல்... ஞாயிறுதோறும் காலை 9 மணிக்கு உங்கள் www.kalkionline.comல்

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com