செமி ஃபைனல் குழப்பங்கள்... ஃபைனல் கவலைகள்!

ராஜபாட்டை ரகசியம்!
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam
Rajapattai Ragasiyam

ல்கி அலுவலகதின் வாசலில் இருந்த அமரர் கல்கியின் சிலையை கும்பிட்டு கொண்டிருந்தபோதே, சிலையின் பின்னால் இருந்து மோடி கோட்  போட்டிருந்த ராரா  எட்டி பார்த்தான். 

ராரா...வின் முழு பெயர் ராஜதானி ராஜப்பா !  தலைநகரில் வசிப்பதால் ராஜப்பாவுக்கு அந்த பெயர் ! அலுவலகத்தில் எல்லோரும், ராரா.... என்று சந்திரமுகி ஸ்டைலில் அவனை அழைப்பார்கள்.ராஜாங்க ரகசியங்களை எப்படியாவது திரட்டி கொண்டு வந்து விடுவான். 

"நான் அப்பவே கல்கி ஆபீஸ் வந்துட்டேண்ணா    ! நீங்கதான் லேட்'' - என்றபடி ராரா அவசரமாக எடிட்டோரியல்  ஆலோசனை அறைக்குள்  நுழைந்தவன், உடனே படபட என்று தகவல்களை அள்ளி வீசினான். 

''தில்லி தாமரை கட்சில  நிறைய பிரச்னை ஓடிகிட்டு இருக்கு! கட்சி சீனியர்ஸ் எல்லோரும் குழம்பி போயிருக்காங்களாம்.செமி ஃபைனல் முடிவுகள் எப்படி இருக்குமோனு பயந்துட்டு இருக்காங்களாம்.''

''உலக கோப்பை கிரிக்கெட்-டே முடிய போகுது. இப்ப செமி ஃபைனல்ஸ் பத்தி என்ன குழப்பம் ?'' -- நான்  திகைத்தேன்.

''அடியேன் சொல்ற செமி ஃபைனலஸ் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்.  அடுத்த வருஷம் நடக்கப் போற ஃபைனல்ஸ் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னாடி நடக்கிற தேர்தல்.ஐந்து மாநிலத்துலயும் ரிப்போர்ட் ஒரு மாதிரிதான் இருக்கு. 

தெலுங்கானாவுல காங்கிரஸ், மத்திய பிரதேஷ் மிசோராம்ல இழுபறி, மிசோரம் ல  கூட்டணி என்கிற நிலையில, ராஜஸ்தானை தான் தில்லி பெரிசா நம்பிகிட்டு இருக்கு. ஆனால், அங்கேயும் பிரச்சனை வந்துடுமோனு கவலைப்படுது டெல்லி.''

''வசுந்தரா சிந்தியா வோட உள்குத்து தானே !'' -- நான் கேட்டவுடன், 'அதே அதே ' என்று  ,பதில் கொடுத்தான் , ராரா ''கடந்த மூணு வருஷமாவே அவங்க ஒதுங்கி இருக்கிற நிலையில மகேந்திர சிங் ரத்தோர் ங்கிற முன்னாள் அமைச்சரை முதல் அமைச்சர் வேட்பாளரா அறிவிச்சிருக்காங்க.

அவருக்கும், வசுந்த்ராவுக்கும், ஆகாது. அவரை  முதலமைச்சர் வேட்பாளரை அறிவிச்சதும், வசுந்தரா ஜகா வாங்கிட்டாங்க. தில்லிக்கு தகவல் போக, பிரதமர் மோடி, ராஜஸ்தான்-ல பிரச்சாரம் செய்த போது வசுந்தரா ராஜே சிந்தியாவை பக்கத்துலயே உட்கார வச்சாராம். இருந்தாலும், உள்குத்து பயங்கரமா நடந்துகிட்டு  இருக்கு. ராஜஸ்தான் மட்டுமாவது தங்களுக்கு கிடைக்கும்னு நம்பிகிட்டு இருக்கிற, பாஜக  குழப்பத்துல இருக்கு. 

''இப்ப இருக்கிற நிலவரம் என்னவாம் ?''

''தெலுங்கானா மூக்கு தலைவர் மூக்கையரை , வாக்காளர்கள்  மூக்கு அறுக்க முடிவு கட்டிட்டாங்களாம். மூக்கு அறுபட போறதால, கை-க்கு அங்கே வாய்ப்பு. மத்திய பிரதேசத்துல  கை கட்சி முன்னணி-ல இருந்தாலும், இப்ப இழுபறி-னு தகவல் வந்திருக்கு. சட்டிஸ்கார் மாநிலத்துலயும் இழுபறி.

PM Modi and Amithsha
PM Modi and Amithsha

ஆக, எல்லா மேட்சுலயும் ஜெயிச்ச இந்தியா, செமி ஃபனல்ஸ் ல திணறிய மாதிரி, தாமரை கட்சி திணறிக்கிட்டு இருக்கு. ''-என்று சொன்ன ராரா,  ஆஸ்திரேலியா,-தென்னாபிரிக்கா செமி ஃபைனலஸ் மேட்சை பார்க்க ஆரம்பித்தவர், திடீரென்று கிசுகிசு குரலில் சொன்னார். ''காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலுல ஜெயிக்கக்கூடாதுனு, மூணு பேர் வேண்டிக்கிட்டு இருக்காங்களாம் ?'' -- 

''மோடி, அமித்ஷா, நட்டா தானே ?''--

''இல்லை மம்தா, நிதிஷ், அகிலேஷ் !'' -- காங்கிரஸ் கர்நாடகாவில் ஜெயிச்ச பிறகே பிக் பாஸ் மாதிரி நடந்துகறதா அவங்க நினைக்கிறாங்க. இப்ப சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மாநிலங்களில் ஆட்சியை பிடித்தால் கூட, தங்கள் அரசியலுக்கு அது நல்லது இல்லை-னு நினைக்கிறாங்க '' --  ராரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

யாரோ கட்டை குரலில்  பாடியபடி உள்ளே வந்தார்கள். 

''உன்னை நம்பி முட்டையில.. 

பொட்டு வச்சேன் மத்தியில..

மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே.. 

பொட்டு வச்ச காரணத்தை.. 

புரிஞ்சுக்க ராஜா..

விட்டு போனா, அழுகி போகும்.. 

முட்டைங்க ராசா.." 

அறைக்குள் ஆர்ப்பாட்டத்துடன் வந்தாள், சீவற சிந்தாமணி. காஞ்சிபுரத்து கிட்ட இருக்கிற பழைய சீவரம் சொந்த ஊர். அதனால் தனது பெயர் சிந்தாமணி முன்பாக, சீவர சிந்தாமணி என்று ஊர் பெயரை சேர்த்து, தன்னை சீவர சிந்தாமணி என்று அழைத்துக் கொண்டாள். ''ஐயோ இந்தம்மாவா ! இவங்க இருக்கிற இடத்துல நான் இருக்க மாட்டேன் !'' -- ராரா அவசரமாக எழுந்தான்.  

''இவங்கதான் சீவர சிந்தாமணி ! எங்க தமிழ்நாட்டு விசேஷ அரசியல் நிருபர் !'' -- சொன்னதும்,  சிந்தாமணி அலட்சியமாக ராரா வை பார்த்தாள் .

''ஒரு டிவி நிகழ்ச்சில,  இந்தாளு சொம்மா  என் முகத்துக்கு நேரா கையை நீட்டி நீட்டி பேசிகிட்டு இருந்தான்.  அதான் ஒரு தபா கையை பிடிச்சு இஸ்து முறுக்கிட்டேன். !'' -- என்றாள், சிந்தாமணி. 

''ஆமா! நீ ஏதோ ஒரு பாட்டு பாடிகிட்டு வந்தியே !''

''ஆமா! அரச மரத்தை பிடிச்ச பேய், அடியில இருக்கிற பிள்ளையாரை பிடிச்சாப்பல,  பெரிய மந்திரிகளை, வம்புக்கு இஸ்துக்கிட்டு இருந்த அண்ணாமலை இப்ப அமைச்சர் கீதா ஜீவன் கிட்டே ரவுசு பண்ணறாரு. 

2000 முட்டை அழுகி போச்சுன்னு அண்ணாமலை சொல்றாரேன்னு  பத்த்ரிக்கை காரங்க கீதா ஜீவன் கிட்ட கேட்க, அவங்க. பழைய முட்டைகளை அடையாளம் கண்டுக்கிறதுக்காக,  முட்டையில் கருப்பு இங்கல பொட்டு வச்சோம்.

மழைல நனைஞ்சு இங்க்  முட்டை உள்ளே போய், முட்டைங்க அழுகி போச்சுன்னு ஒரு விளக்கம் கொடுக்க, ஊரெல்லாம் அதை ட்ரோல் செஞ்சுக்கினு இருக்கங்க. அதனாலதான் அந்த பாட்டை பாடினேன். ''-- சிந்தாமணி சொன்னாள் .

''ஏம்மா ! திருவள்ளுவர், பாரதியார்  நெத்தியில் இருந்த பொட்டை எல்லாம் நீக்கிட்டு, முட்டைகளுக்கு பொட்டு வைக்கிறாங்களே ! இதென்ன கண்றாவி !'' -ராரா கேட்டான். . 

''அத்தை விட்டு தள்ளு ! ! உதயநிதி மோட்டார் சைக்கிள் யாத்திரை தொடங்கி இருக்கார் தெரியுமா ?''  கன்னியாகுமரி தொடங்கி சென்னை வரைக்கும் பைக்ல திமுக இளைஞர் அணி வர போறாங்களாம் !'' --- சிந்தாமணி சொன்னாள் . ''தெரியுமே ! பைக்கர் வாசன் மேல வழக்கு வந்தபோதே ,  சின்னவர் பைக் ஓட்ட போறாரு னு தெரியும் !- ராரா சொன்னான்.  

''சரி ! வந்ததுக்கு ரெண்டு பெரும் ஆளுக்கு ஒரு ரகசியத்தை சொல்லிட்டு நடையை காட்டுங்க !'' --- நான் சொன்னதும், ராரா முந்திக்கொண்டான். ''தெரியுமா ! மித்ரன் 2025 ல பதவியை விட்டுட்டு இமாலயத்துக்கு போறாராம் ! இதுநாள் வரைக்கும்  காவிகாரர் தான் அவர்கிட்ட  இருந்து பொறுப்பை வாங்க போறதா சொல்லிட்டு இருந்தார்களாம்.

ஆனால் இப்ப அவர் ஜகா வாங்குறாராம்.  வெளிநாடு பயணம் எல்லாம் செய்யணும். எனக்கு விருப்பம் இல்லை னு அவர் சொன்னதால,  தலைமையின் பார்வை புதிய ஒருத்தர் மேல விழுந்திருக்கு. அவர் தமிழ் பேசறவர்.  அடுத்த பிரதமர் தமிழரா இருக்கலாம்னு அவரை மனசுல வச்சுக்கிட்டு தான்  அமித் ஷா சொன்னாராம். ''

''சரி ! சிந்தாமணி நீ என்ன ரகசியம் சொல்ல போறே ? ''இதோ ! இந்த ஆளு சொன்ன ரகசியத்துக்கு, நானா சொல்ல ஒரே ரகசியத்துக்கும் தொடர்பு கீது !  கல்லை கல்லோடும், நெல்லை நெல்லோடும் போட போறங்களும்.

சீக்கிரத்துலயே, துண்டு துண்டாக இக்கரை இல்லை விடலைகளை எல்லாம்  திரட்டி, தைச்சு, சின்னாத்தா கையாள சோறு திங்க போறாங்களாம். ! எட்டு வழி காரருக்கு இருக்கிற தடை கல்லை நீக்கிட்டதால, அவருக்கு இதுல சந்தோஷம்தானாம்!

''தீபாவளிக்காக வந்தேன். இன்னைக்கு நைட் டெல்லி போறேன் !'' -- என்றபடி ராரா கிளம்ப, அவன் பின்னாடியே சீவர சிந்தாமணியும் நடந்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com