

அரசவைக் கவிஞர் - கவியரசு கண்ணதாசனின் கற்பனை வளம், கருத்து வளமிக்க கட்டுரைகள் 1980 கல்கி வார இதழ்களில் சிறப்பு மிக்க ‘கடைசி பக்கம்’ (கல்கி 14.09.1980) என்ற பகுதியில் பிரசுரமாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக சில கடைசி பக்கங்கள் பிரீமியம் தொடராக இதோ...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
வானம் தூரத்தில் இருக்கிறது!
தன் மகனுக்கு முடிசூட்டிப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டான் தசரதன். அது நிறைவேறிற்றா?
அயோத்தி நகரத்துப் பஞ்சணையில்தான் தூங்கப் போகிறோம் என்று கனவு கண்டாள் சீதா. அது நிறைவேறிற்றா?
சீதையை மட்டுமல்ல, ரகுவம்சத்தையே அழித்துவிடுவதுபோல் கொதித்து நின்றான் இலங்கை வேந்தன். அது நிறைவேறிற்றா?
மாலை சூடும்போது இந்த வாழ்வு சாஸ்வதம் என்றுதான் கருதினாள் கண்ணகி, அது நிறைவேறிற்றா?