

அரசவைக் கவிஞர் - கவியரசு கண்ணதாசனின் கற்பனை வளம், கருத்து வளமிக்க கட்டுரைகள் 1980 கல்கி வார இதழ்களில் சிறப்பு மிக்க ‘கடைசி பக்கம்’ (கல்கி 14.09.1980) என்ற பகுதியில் பிரசுரமாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக சில கடைசி பக்கங்கள் பிரீமியம் தொடராக இதோ...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
கடிகாரத்தின் பெரிய முள்!
நாளொன்றுக்குப் பதினான்கு மணி நேரம் வேலை பார்க்கும் பழக்கம் எனக்கு முன்பிருந்தது.
காலை ஏழு மணிக்குக் குளித்துவிட்டுப் புறப்பட்டால், அந்தச் சுகமான காற்றில் மளமளவென்று காரியங்களை முடிப்பேன். அவை அற்புதமான நாட்கள்.
உதயத்தையும் அஸ்தமனத்தையும் ஒரு நாள் பாராவிட்டால் அன்றையப் பொழுது வீண்.
மனித வாழ்நாள் நிச்சயமற்றது. ஆகவே இருக்கின்ற நாளில் ஒன்றுகூட மிச்சமாகக் கூடாது.