அரசவைக் கவிஞர் - கவியரசு கண்ணதாசனின் கற்பனை வளம், கருத்து வளமிக்க கட்டுரைகள் 1980 கல்கி வார இதழ்களில் சிறப்பு மிக்க ‘கடைசி பக்கம்’ (கல்கி 14.09.1980) என்ற பகுதியில் பிரசுரமாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக சில கடைசி பக்கங்கள் பிரீமியம் தொடராக இதோ...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
தாய் இல்லையே...
எனக்கு முப்பது வயதாகும்வரை என் பெற்றோர் உயிரோடிருந்தார்கள். சுவீகாரத் தாயாரும் ஜீவித்திருந்தார்கள். சென்னையிலேயே வாழ்ந்துகொண்டிருந்த நான் எப்போதாவது நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் காரை எடுத்துக்கொண்டு கிராமத்துக்குக் கிளம்பிவிடுவேன்.
நான் வந்துவிட்டேன் என்றால் போதும், காரைக்குடியில் இருந்த என் சுவீகாரத் தாயாருக்கு நிலைகொள்ளாது. மாமிச வகைகளில் எத்தனை உண்டோ அத்தனையும் வீடு வந்து சேர்ந்துவிடும். அவர்களே சமைப்பார்கள். பலநாள் பட்டினி கிடந்தவன்போல் நான் சாப்பிடுவேன்.

