

அரசவைக் கவிஞர் - கவியரசு கண்ணதாசனின் கற்பனை வளம், கருத்து வளமிக்க கட்டுரைகள் 1980 கல்கி வார இதழ்களில் சிறப்பு மிக்க ‘கடைசி பக்கம்’ (கல்கி 14.09.1980) என்ற பகுதியில் பிரசுரமாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக சில கடைசி பக்கங்கள் பிரீமியம் தொடராக இதோ...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
கல்யாணச் சதுரங்கம்!
பெண்மை, மென்மையானது. அதன் உள்ளம் ஆழமானது. அது சுரங்கம் போன்றது. அத்தனையும் ரகசியச் சுரங்கம். அவள் நல்லவளோ, கெட்டவளோ, ஆயிரம் ரகசியங்களை ஒரு மனத்தில் அடக்கக்கூடிய சக்கியுள்ளவளாக இருக்கிறாள்.
ஆடவன்தான் உளறுவாயன்; எதையும் உளறிவிடுகிறான். பெண்மை பலவீனமானது. அந்தப் பலவீனமே பலமானது என்று நான் முன்பொரு முறை எழுதியிருக்கிறேன்.
அதிவீரராம பாண்டியனும் மற்றவர்களும் சொன்னபடி பெண்ணைத் தேர்ந்தெடுப்பது பற்றி இன்றைய இளைஞனுக்கு நான் சில யோசனைகளைச் சொல்லியாக வேண்டும்.