

அரசவைக் கவிஞர் - கவியரசு கண்ணதாசனின் கற்பனை வளம், கருத்து வளமிக்க கட்டுரைகள் 1980 கல்கி வார இதழ்களில் சிறப்பு மிக்க ‘கடைசி பக்கம்’ (கல்கி 14.09.1980) என்ற பகுதியில் பிரசுரமாகி, மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கல்கி ஆன்லைன் வாசகர்களுக்காக சில கடைசி பக்கங்கள் பிரீமியம் தொடராக இதோ...
தொடரின் அனைத்துப் பகுதிகளையும், மேலும் பல சுவாரஸ்யமான கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
சில ஊஞ்சல்கள்; பல ஊஞ்சல்கள்!
மனிதன் கல்யாணத்தன்றுதானே கடைசியாகச் சிரிக்கிறான்!
எல்லாருக்குமே அப்படித்தானா...?
நான் ஆனந்தமான தம்பதிகளை ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறைதான் சந்திக்கிறேன்.
ஜாதகம் பார்த்தார்கள். மிகவும் பொருத்தமாக இருந்தது. முகூர்த்தத் தேதியும் முறைப்படிதான்; குறையே இல்லை.
ஆனால் சந்தோஷத்தை இவை தாங்கி வரவில்லையே....!